பிரச்சனை வந்தால் 12 ராசிகளும் அதனை எப்படி சமாளிப்பார்கள் தெரியுமா ?
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் பிரச்சனை என்பது கட்டாயம் வந்து செல்லும். அந்த பிரச்சனையை நாம் எப்படி சமாளிக்கின்றோம் என்பதை பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ராசி அமைப்பு அவர்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதை பார்க்க முடியும். அந்த வகையில், 12 ராசிகளில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை எப்படி சமாளிப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை விட்டுவிட்டு பின்வாங்க மாட்டார்கள். நேருக்கு நேராக பேசக்கூடியவர்கள்.
ரிஷபம்:
இவர்கள் பிரச்சனையை கண்டு பயப்பட மாட்டார்கள். நிதானமாக அதனை சரி செய்வார்கள்.
மிதுனம்:
பிரச்சனை வந்தால் அதனை தன்னுடைய பேச்சு திறமையால் சரி செய்து கொள்வார்கள்.
கடகம்:
இவர்களுடைய மனமானது பிரச்சனையை பொறுத்துக் கொள்ள முடியாது. அமைதியாக பின் வாங்கி விடுவார்கள்.

சிம்மம்:
எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூட்டத்தின் முன்பாக நின்று பயமில்லாமல் சண்டை போடக் கூடியவர்கள்.
கன்னி:
இவர்கள் நேரடியாக மோத மாட்டார்கள். ஆனால், இவர்களுடைய மூளையை பயன்படுத்தி லாஜிக்காக சிக்கல்களில் இருந்து வெளி வருவார்கள்.
துலாம்:
இவர்கள் எப்பொழுதும் சமாதானத்தை விரும்புவார்கள். சண்டை சச்சரவு பிடிக்காது.
விருச்சிகம்:
எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும் அசரவே மாட்டார்கள். அந்த பிரச்சனையை வேரோடு தூக்கி எறிந்து விடுவார்கள்.
தனுசு:
எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்ற ஒரு தன்னம்பிக்கையும் துணிச்சலும் இவர்களிடம் இருக்கும்.
மகரம்:
இவர்கள் எதையும் பயப்படாமல் பொறுமையாக யோசித்து திட்டமிட்டு செயல்பட கூடியவர்கள்.
கும்பம்:
தேவையில்லாத வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக ஒதுங்கி வேடிக்கை பார்த்து பார்ப்பார்கள்.
மீனம்:
இவர்கள் பிரச்சனை என்று வந்துவிட்டால் பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |