பலரும் அறிந்திடாத சனி பகவானின் மறுபக்கம்.. என்ன தெரியுமா?
சனிபகவான் என்றாலே நமக்கு அவர் ஒரு கொடிய கிரகம் என்றுதான் நினைவுக்கு வரும். அதோடு சனி பகவான் என்றால் எல்லோரும் பயந்து விடுவார்கள். அதிலும் ஏழரை சனி தொடங்கி விட்டது என்றால் அவர்களுக்கு பயம் உருவாகிவிடும்.
அப்படியாக, பலரும் சனி பகவான் உடைய ஒரு மறுபக்கத்தைப் பற்றி பேசுவதற்கு தவறி விடுகிறார்கள். உண்மையில் சனி பகவான் மோசமானவர் அல்ல. ஒரு மனிதனை இன்னும் சிறந்த மனிதனாக மாறக்கூடியவர் சனி பகவான் மட்டுமே.
அதோடு உங்கள் பாவங்களிலிருந்தும் உங்களுடைய கர்ம வினைகளில் இருந்தும் விடிவிக்கக்கூடிய ஒரு அற்புதமான கிரகம் என்றால் அதுவும் சனி பகவான் தான். ஆக, சனி பகவானை புரிந்தவருக்கு அவர் ஒரு நண்பன் மற்றும் வழிகாட்டி. சனி பகவானை புரிய தவறியவர்களுக்கு அவர் ஒரு அரக்கன் போல் தான் காட்சியளிப்பார்.

அப்படியாக, சனி பகவான் உண்மையில் எப்படிப்பட்ட கிரகம் அவர் ஒரு மனிதனுக்கு என்ன நல்லது செய்வார்? என்பதை பற்றி பார்ப்போம். நீங்கள் மிகவும் நல்ல மனிதராக நல்ல சிந்தனை கொண்டிருக்கக்கூடிய மனிதர்ராக இருந்தீர்கள் என்றால் சனிபகவான் உங்களுக்கு உங்களை சுற்றி இருக்கக்கூடிய போலியான முகங்களை மிகத் தெளிவாக காட்டி விடுவார்.
அதைப்போல் உங்களை உணர்வதற்கு சனி பகவான் ஒரு அற்புதமான வாய்ப்புகளை கொடுப்பார். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் சனி பகவான் உங்களை நல்ல மனிதராக மாற்றாமல் விடமாட்டார். காரணம் அதுதான் அவருடைய வேலை.
நல்ல உழைப்பாளியாக இருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருந்தீர்கள் இருந்தால் உங்களை உயர்த்தி விடுவார்.
நீங்கள் நல்ல வலிமையான மனிதராக இந்த சமுதாயத்தில் நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இருப்பினும் ஏதேனும் தடை தடங்கல் உங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது என்றால் அதை மீறுவதற்கான ஆற்றலையும் வழங்க கூடியவர் இவரே.

ஆக நீங்கள் நல்ல மனிதராக நல்ல சிந்தனை கொண்டவராக மட்டும் இருந்து விட்டால் சனிபகவான் உங்களை எவ்வளவு தூரம் அவரால் உயர்த்த முடியுமோ அந்த அளவிற்கு உங்களை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று சேர்த்து விடுவார்.
உண்மையைச் சொல்லப்போனால் உங்களுடைய புண்ணிய கணக்கு சரியாக இருக்க சனி பகவான் உங்களை மரணத்தில் இருந்தும் காப்பாற்றி விடுவார். அதைவிட மிக முக்கியமாக உங்களை காயப்படுத்தியவர்களையும் உங்களை அவமானப்படுத்தியவர்களையும் அவர்கள் செய்தது தவறு என்று உணரும்படி உங்கள் கண் முன்னால் நடக்கச் செய்வார். இதற்கெல்லாம் நீங்கள் நல்ல மனிதன் என்ற ஒரு நிலையில் இருந்தால் மட்டும் போதும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |