வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்வது ஆபத்தை தருமா?
கலியுக வரதன் என்று போற்றப்படும் முருகப்பெருமான் மக்களின் துயர் தீர்ப்பவராக இருக்கிறார். அவருக்கு உலகம் எங்கிலும் பக்தர்கள் அதிகம் இருக்கின்றனர். நமக்கு முருகர் என்றால் முதலில் நினைவில் வருவது அவரின் வேலும் மயிலும் தான்.
அப்படியாக, பலரும் முருகப்பெருமானின் அதீத பக்தியின் வெளிப்பாடாக வீடுகளில் வேல் வாங்கி வைத்து பூஜை செய்வது உண்டு. பொதுவாக, வீடுகளில் வேல் வாங்கி வைத்து பூஜை செய்வது என்பது நமக்கு எண்ணற்ற பலன்கள் கொடுத்தாலும், வேல் வழிபாட்டில் நாம் முக்கியமான சில விஷயங்களை பின் பற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அவ்வாறு சில பணி சூழல் காரணமாக பூஜை செய்ய முடியாதவர்கள் கட்டாயம் வீட்டில் வேல் வழிபாடு செய்வதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். மேலும், நம்முடைய இந்து மத பண்டிகைகளில் அட்சய திருதியை என்பது மிக சிறந்த சுப தினமாக பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் நாம் என்ன நல்ல காரியங்கள் செய்தாலும் அவை நமக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். அட்சய திருதியை நாளில் பலரும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவார்கள். ஆனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க இயலாது.
அப்படியாக, கட்டாயம் அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி வழிபாடு செய்யவேண்டுமா? அவ்வாறு தங்கம் வெள்ளி வாங்க முடியாதவர்கள் என்ன பொருட்கள் வாங்கி வழிபாடு செய்யலாம் என்று பல்வேரு ஆன்மீக குறிப்புகளை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெறிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |