குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
குழந்தைகள் தான் நம் நம்முடைய வீட்டின் நாட்டின் விதை.அப்படியாக அவர்களுடைய வளர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்று.குழந்தைகள் வளரும் பொழுதே நாம் நல்லது கெட்டதை சொல்லும் விதத்தில் அவர்களுக்கு கற்று கொடுக்கவேண்டும்.
அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு ஆன்மீகம் பற்றிய சிறு சிறு சிந்தனைகளையும் நாம் அவர்கள் சிறு வயதாக இருக்கும் பொழுதே அறிமுகப்படுத்த தொடங்கினால் அவர்களுக்கு வளர்ந்த பிறகு அந்த ஆன்மிகம் ஒரு நல்ல வாழ்வை வாழ வழிவகுக்கும்.
உதாரணமாக நாம் இறைவனுடைய சிறு சிறு பாடல்கள் அவர்களுக்கு கற்று கொடுக்கலாம்.இந்த இறைவனுடைய பாடல்கள் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு தோஷ நிவர்த்தி உண்டு.
அதை அவர்கள் சிறு வயதில் இருந்தே கற்க தொடங்கி பாட ஆரம்பித்தால் அவர்களுக்கு வளரும் வேலையில் நல்ல பலன்கள் தரும்.மேலும் இவை எல்லாம் தாண்டி குழந்தைகளுக்கு படிப்பு என்பது மிக முக்கிய தேவை.
அந்த படிப்பு நல்ல படியாக அமைந்தால் மட்டுமே அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.ஆனால் சில குழந்தைகளுக்கு படிப்பில் கவனக்குறைவாக இருப்பார்கள்.
அப்படியான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முருகப்பெருமானின் இந்த பாடலை சொல்லிக்கொடுக்க அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு உற்சாகமாக செயல்படுவார்கள்.
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய்
பொருபுங் கவரும், புவியும், பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே
மிகவும் எளிமையான அருணகிரிநாதர் பாடிய இந்த பாடலை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க அவர்களுக்கு நல்ல ஆர்வம் ஏற்படுவதோடு படிப்பிலும் கலைத்துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |