வீட்டில் செல்வம் பெருக இந்த ஒரு பூவை மட்டும் வைத்து பாருங்கள்- உடனடி மாற்றம் பெறலாம்
மனிதர்கள் வாழ்க்கையில் கட்டாயம் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் பொருளாதார கஷ்டத்தை சந்திக்க நேரிடும். பண கஷ்டம் வந்து விட்டால் குடும்பத்தில் அனைத்து துன்பமும் சேர்ந்தே வந்து விடும். அப்படியாக, பொருளாதார கஷ்டங்கள் விலகி, அதிர்ஷ்டம் உண்டாக வீடுகளில் வைக்க வேண்டிய முக்கியமான பூவைப் பற்றி பார்ப்போம்.
முருகப்பெருமான் வீற்றியிருக்கும் பழனி மலையில் வருடத்திற்கு 15 நாட்கள் மட்டுமே பூக்கும் பூவாக கடம்ப மலர்கள் உள்ளது. இந்த பூ பல்வேறு மருத்தவ குணம் நிறைந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, இந்த மலர்களை தழுவி வீசும் காற்று சஞ்சீவி காற்று என்றும் சொல்கின்றனர் மக்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மலருக்கு மனிதனின் பெரும் கஷ்டமான பண கஷ்டத்தை போக்க கூடிய சக்தி இருப்பதாக சொல்கிறாரக்ள். பொதுவாகவே, நாம் வீடுகளில் வளர்க்கும் ஒவ்வொரு செடிகளுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.
அந்த வகையில் வீடுகளில் சந்திக்கும் பொருளாதார கஷ்டம் விலக வாஸ்து ரீதியாக கட்டாயம் நாம் சில செடிகள் வளர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த கடம்பை மலர் வளர்ப்பதால் நல்ல மாற்றம் பெறலாம். சாஸ்திரங்களின் படி, கடம்ப மலரை கிருஷ்ணர் மற்றும் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தது என்று நம்பப்படுகிறது.
இதனை நாம் பாதுகாப்பாக வைத்து பராமரித்து வந்தால் வீடுகளில் உள்ள துன்பமும் பண கஷ்டமும் விலகி மகிழ்ச்சி உண்டாகும். மேலும், வீடுகளில் உள்ள வாஸ்து பிரச்சனைகளும், கிரக தோஷங்களும் விலக இந்த மலர் உதவுவதாக கூறப்படுகிறது.
இந்த செடியை வீடுகளில் வைப்பதால் எதிர்மறை ஆற்றல் நம்மை சூழ்வது இல்லை. முக்கியமாக, ஜாதகத்தில் சந்திக்கும் ஏதேனும் கிரக பிரச்சனை காரணமாக துன்பம் அடைபவர்கள் இந்த செடியை வீடுகளில் வைப்பதால் அதன் பாதிப்பு குறையும்.
முக்கியமாக ஒருவரை குரு தோஷத்தில் இருந்து இது விடுவிக்கிறது. இந்த பூ கட்டாயம் நம் வாழ்க்கையில் கொடுக்கும் அற்புத மாற்றத்தை நாம் காணலாம். அதோடு, கிருஷ்ண பகவானின் பரிபூர்ண அருளும் நமக்கு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







