முருகப்பெருமானை சரண் அடைந்தால் என்ன நடக்கும்?
மனிதனுக்கு இன்பத்தை காட்டிலும் துன்பம் வரும் வேளையில் தான் பலரின் உண்மை முகத்தை அவன் அறிந்து கொள்வான்.அதே போல் தான் கடவுளையும் அவன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தை காட்டிலும் கண்ணீர் சிந்தும் நொடியில் தான் ஆத்மார்த்தமாக உணரமுடியும்.
என்னதான் துன்பம் அனுபவிப்பது நம்முடைய கர்மவினையாக இருந்தாலும் கடவுள் நம்மை கைவிடாமல் துணை நின்று கண்ணீர் துடைக்கும் பொழுது,துன்பமும் கொடுத்தாய்!என்னை கீழேவிழாமல் தாங்கி கொள்ள உன் கரங்களையும் கொடுத்தாய்!உன் கரங்கள் துணை இருக்க நான் எத்தனை பிரச்சனையும் கடந்து செல்ல தயார் என்ற தைரியம் பிறக்கும்.
இது தான் கடவுளின் கருணை.ஆக மனிதனுக்கு துன்பம் என்பது பெரும்பாலும் அவனை பிடிக்காமல்,அவன் வளர்ச்சி பொறுக்காமல் அவனின் மிக நெருங்கியவர்களே எதிரியாக மாறி அவனுக்கு தாங்கிக்கொள்ள முடியாத கஷ்டத்தை கொடுப்பதால் வருவதே.அந்த வேளையில் ஒரு போருக்கு செல்வது போல் அவன் மன நிலை இருக்கும்.
அந்த நேரத்தில் நமக்கு இருக்கும் ஒரே துணை கடவுள் மட்டும் தான்.அப்படியாக கலியுக வரதன் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான்,பக்தர் அழுகையை பார்க்க பொறுக்காதவர் அவரை பற்றி கொண்டால் எதிரிகள் தொல்லையும் விலகும் அதோடுஎதிரிகள் மனதில் நம் மீது உள்ள வன்மமும் போக்கி அமைதியான சூழல் உருவாக்கி அருள்புரிவார்.
நாம் தீராத பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பொழுது அருகில் இருக்கும் முருகன் ஆலயம் அல்லது உங்கள் மனதிற்கு பிடித்த முருகன் கோயிலுக்கு சென்று அபிஷேகம் செய்து அதை கண் குளிர தரிசனம் செய்யவேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய கவலைகள் படிப்படியாக குறையும்.
முருகப்பெருமானின் மந்திரங்கள் பாடல்கள் பாடி வழிபட தீர்விற்கு வராத பிரச்சனையும் அவன் அருளால் முடிவிற்கு வரும்.ஆனால்,மனதார அவனை நம்பி,அவனை சரண் அடைந்து நாம் வழிபாடு செய்யவேண்டும்.
அப்படியாக வீட்டில் உள்ள பூஜை அறையில் முருகனுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி முருகனின் சத்துரு சம்ஹார வேல் பதிகத்தில் இருந்து ஒரு பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்.
பாடல்
சண்முக கடவுள் போற்றி
சரவண துதித்தாய் போற்றி
கண்மணி முருகன் போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தன்மலர் கடம்ப மாலை தாங்கிய தோழா போற்றி
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி!!!
இந்த பதிகத்தை மனதார மூன்று முறை பாடி இறுதியில் கற்பூர தூபம் ஆராதனை காட்ட வேண்டும்.இதை தினமும் செய்து வர உங்களின் எதிரிகள் உங்களை விட்டு விலகுவதோடு,அவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் வன்மம் முற்றிலும் தீர்ந்து பிரச்சனை அமைதி நிலைக்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |