கோவிலுக்கு சென்றால் இனி இந்த தவறை செய்யாதீர்கள்
ஜோதிடம் என்பது ஒன்பது கிரகங்களால் கணித்து சொல்ல கூடிய ஒரு விஷயம். இந்த ஒன்பது கிரகங்கள் தான் ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்க கூடியதாக இருக்கிறது. அதனால் இந்த ஒன்பது கிரகங்களையும் நாம் முறையாக போற்றி வழிபாடு செய்வது அவசியம் ஆகிறது. ஆனால் பலரும் நவகிரக வழிபாட்டை எளிதாக கடந்து விடுகிறார்கள்.
கோவிலுக்கு சென்றால் நவகிரக வழிபாடு செய்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். நாம் இப்பொழுது நவகிரகங்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? நாம் ஏன் நவகிரக வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
நாம் தொடர்ந்து நவக்கிரகங்களை வழிபாடு செய்யும் பொழுது நம் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தீய தாக்கங்கள் குறைகிறது. ஜோதிடத்தில் நவகிரகம் என்பது சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி, புதன், செவ்வாய், ராகு, கேது ஆகும்.
இந்த ஒன்பது கிரகங்களும் நம்முடைய வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக செயல்படுகிறது. அதனால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் சிறப்பாக பெற இந்த ஒன்பது கிரகங்களையும் முறையாக வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.
அதோடு, ஒருவருடைய ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்களை முழுமையாக போக்கக்கூடிய சக்தி நவகிரக வழிபாடுகளால் நடக்கிறது. அதாவது நம்முடைய ஜாதகத்தில் எந்த கிரகம் பாதிப்படைந்து இருக்கிறதோ அந்த கிரகத்தை மனதார நினைத்து வழிபாடு செய்ய அந்த கிரகங்களின் தாக்கம் குறைந்து நன்மை உண்டாகிறது.
இந்த வழிபாட்டை நாம் மனதார செய்து வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் பொழுது நிச்சயம் சிறந்த மாற்றத்தை நாம் காணலாம். ஆக கோவிலுக்கு சென்றால் நவகிரகங்களை சாதாரணமாக கடந்து விடாமல் முழு மனதோடு தன்னோட வாழ்க்கையில் அனைத்து சுகபோகங்களையும் அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







