துன்பத்தில் இருந்து விடுபட அபரா ஏகாதசி விரதம்- எப்பொழுது தெரியுமா
இந்து மதத்தில் ஏகாதசி என்பது மிக சிறந்த வழிபாட்டிற்கு உரிய நாளாகும். அன்றைய நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை. அப்படியாக, ஒரு வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசி விரதங்கள் வருகிறது.
நாம் எத்தனை விரதங்கள் இருந்தாலும் இந்த ஏகாதசி விரதம் தனி சிறப்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மே முதல் ஜூன் மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியை அபார ஏகாதசி என்று சொல்கிறார்கள்.
அபார என்றால் அளவில்லாதது என்று பொருள். இந்த ஏகாதசியில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நாம் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். இந்த அபார ஏகாதசி வருகின்ற மே 23ஆம் தேதி வருகிறது.
இந்த நாளில் நாம் பெருமாளை தவறாமல் வழிபாடு செய்வதால் நம் வாழ்க்கையில் சந்திக்கும் பெரும் பிரச்சனைகள் நம்மை விட்டு விலகும் என்கிறார்கள். அதனால் வாழ்க்கையில் மிக பெரிய சிக்கலில் சிக்கி இருப்பவர்கள் கட்டாயம் இந்த நாளில் பெருமாளை நினைத்து வழிபாடு செய்வதால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை பெறலாம்.
எத்தனை விரதங்கள் இருந்தாலும், அவை இந்த ஏகாதசி விரதத்திற்கு ஈடாகாது என்பது தான் உண்மை. அதிலும் குறிப்பாக அபார ஏகாதசி நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நம்முடைய உடலும் மனமும் தூய்மை அடையும். நீண்ட நாட்களாக சிக்கி தவிக்கும் பிரச்சனை நல்ல முடிவை பெற்று வாழ்க்கையில் சந்தோசம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |