புதுமனை குடி போகும் பொழுது ஏன் இந்த 2 பொருட்கள் அவசியம் தெரியுமா?

By Sakthi Raj Sep 05, 2026 05:45 AM GMT
Report

நம்முடைய இந்து மத சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு காரியத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது. அப்படியாக, புதுமனை குடி போகும் போது நாம் உப்பு, மஞ்சள் வாங்கிக் கொடுப்பது உண்டு.

அதேபோல் வீட்டிற்குள் முன்முதலாக கொண்டு செல்லக்கூடிய பொருளாகவும் உப்பு மஞ்சள் உள்ளது. அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் பார்ப்போம்.

புதுமனை குடி போகும் பொழுது ஏன் இந்த 2 பொருட்கள் அவசியம் தெரியுமா? | Importance To Buy Salt And Manjal On Housewarming

 பொதுவாகவே, உப்பு கெட்ட சக்திகளை அடியோடு விரட்டக்கூடிய ஆற்றல் கொண்டது. இதனால் உங்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றல் வராமல் தடுக்கிறது. அது போல் மஞ்சள் கிழங்கு மங்களம் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்பை கொண்டு வந்து சேர்க்கிறது.

ஆகையால் இந்த இரண்டு பொருளான உப்பு மற்றும் மஞ்சள் சேர்ந்து வீடுகளில் சுத்தமும் சாந்தமும் நல்ல அதிர்ஷ்டமும் கொடுக்கிறது.

புதுமனை குடி போகும் பொழுது ஏன் இந்த 2 பொருட்கள் அவசியம் தெரியுமா? | Importance To Buy Salt And Manjal On Housewarming

மேலும், இவை இரண்டிலும் தெய்வீக தன்மை அதிகம் நிறைந்திருப்பதால் வீட்டிற்கு பாதுகாப்பும், குடும்பத்திற்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

புதிய இடத்தில் நல்ல தொடக்கம் அமையவும் வாழ்க்கை வளமாகவும் வீட்டில் பொருளாதார கஷ்டம் இல்லாமல் இருப்பதற்கும் இது ஒரு சின்னமாக தரப்படுகிறது.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US