இந்தியாவில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கியமான 5 ராமர் கோயில்கள்
நம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் கட்டாயம் நாம் வழிபட வேண்டிய இறைவன் ஸ்ரீ ராமர். மஹாவிஷ்ணு 7வது அவதாரமான ஸ்ரீ ராமர் அவதாரமாக மனித பிறப்பு எடுத்தார். மனிதனாக பிறந்த ஸ்ரீ ராமர் சந்திக்காத துன்பம் இல்லை. ஆனால் அந்த துன்பத்திலும் நாம் எவ்வாறு நேர்மையாக கடமை தவறாது வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமர்.
அப்படியாக, அவரின் பிறந்த தினமான ஸ்ரீ ராமநவமியில் அவரின் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் சென்று வழிபாடு செய்வது சிறந்த பலன் கொடுக்கும். அப்படியாக, நாம் இந்தியாவில் வாழ்நாளில் கட்டாயம் ஒரு முறையாவது சென்று வழிபாடு செய்யவேண்டிய ஸ்ரீ ராமர் ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.
அயோத்தி ராமர் கோவில் :
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீ ராமர் பிறந்த இடம் ஆகும். இங்கு ஸ்ரீ ராமருக்கு எழுப்பப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மிக முக்கியமான ஆலயமாக கருதப்படுகிறது. ஆக, ராமர் உதித்த அந்த மண்ணில் ராமரை வழிபாடு செய்வது நமக்கு மோட்சம் அளிக்கும்.
ராம ராஜ கோவில், ஓர்ச்சா :
மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தில் ஓர்ச்சா ராமர் கோவில் அமையப்பெற்று இருக்கிறது. இந்த கோயில் மற்ற போல் இல்லை. இங்கு ஸ்ரீ ராமர் ராஜாவாக வழிபாடு செய்யப்படுகிறார். அரச சபை மற்றும் ராணுவ பாணி வணக்கத்துடன் இங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் :
ராமாயணத்திலும் வரலாற்றிலும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட கோயிலாக இந்த ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் திகழ்கிறது. இலங்கையில் தீவிரமான சிவபக்தனான ராவணனை வதம் செய்த ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட அந்த தோஷம் போக்குவதற்காக சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்து, ராமர் வழிபட்ட தலமாக ராமேஸ்வரம் கருதப்படுகிறது. இங்கு சென்று வழிபாடு செய்வது அனைத்து விதமான நன்மைகள் அளிக்கிறது.
கோதண்ட ராமர் கோவில், திருப்பதி :
திருப்பதியில் உள்ள மிக முக்கியமான ஆன்மிக தலங்களில் ஒன்று கோதண்ட ராமர் கோவில். இது ராமர், சீதை மற்றும் லட்சுமணரை ஒன்றாக சித்தரிக்கும் கோவிலாகும். இங்கு ராமர், கையில் வில்லுடன் காட்சி தருகிறார். திருப்பது செல்பவர்கள் கட்டாயம் இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்வது நல்ல மாற்றம் கொடுக்கும்.
திரிச்சூர் ராமர் கோவில் :
கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ளது இந்த திரிப்ராயர் ஸ்ரீ ராமர் கோவில். இங்கு ராமர், போர் வீரர் வடிவத்தில் காட்சி கொடுக்கிறார். இது கேரளாவின் பிரம்மாண்ட கோவில் திருவிழாக்களுடன் நெருங்கிய தொடர்புடைய கோவிலாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |