ஆனி மாதத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரத நாட்கள்
தமிழ் மாதம் 12 மாதங்களும் இறைவழிபாட்டிற்கு உரிய முக்கியமான மாதங்கள் ஆகும். அப்படியாக, வருகின்ற ஜூன் 15 ஆம் தேதி பிறக்கும் ஆனி மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய முக்கிய மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் பல்வேறு சிறப்புகளும் விசேஷங்களும் நடக்க உள்ளது. இந்த மாதத்தை ஜேஷ்டா மாதம் என்றும் அழைப்பார்கள். ஜேஷ்டா என்றால் மூத்த மற்றும் பெரிய என்ற பொருள்.
இந்த மாதத்தில் தான் ஆனி திருமஞ்சனம், அபார ஏகாதசி, பீம ஏகாதசி, முப்பழந்திருவிழா, சாவித்திரி விரதம் போன்றவை விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதோடு இந்த மாதத்தில் தான் பெரியாழ்வார், நாதமுனிகள் போன்ற ஆன்மீக பெரியோர்கள் தோன்றியதாக புராணங்கள்.
அதோடு, ஆனி மாதத்தில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த விரதம் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு யார் ஒருவர் விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லா ஏகாதசியிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், இதை உடல் நிலை ஏற்றுக்கொள்ளும் என்று கருதுபவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
அப்படியாக, இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆனி மாதத்தில் எந்த நாட்கள் என்ன விசேஷம் என்று பார்ப்போம்.
ஜூன் 15, ஆனி 1, திருவோணம்
ஜூன் 17, ஆனி 3, சஷ்டி
ஜூன் 18, ஆனி 4, அஷ்டமி
ஜூன் 21, ஆனி 7, ஏகாதசி
ஜூன் 22, ஆனி 8, கார்த்திகை
ஜூன் 23, ஆனி 9, பிரதோஷம்
ஜூன் 25, ஆனி 11, அமாவாசை
ஜூன் 26, ஆனி 12, சந்திர தரிசனம்
ஜூன் 29, ஆனி 15, சதுர்த்தி
ஜூலை 1, ஆனி 17, சஷ்டி
ஜூலை 3, ஆனி 19, அஷ்டமி
ஜூலை 6, ஆனி 22, ஏகாதசி
ஜூலை 8, ஆனி 24, பிரதோஷம்
ஜூலை 10, ஆனி 26, பவுர்ணமி
ஜூலை 12, ஆனி 28, திருவோணம்
ஜூலை 14, ஆனி 30, சங்கடஹர சதுர்த்தி
ஜூலை 16, ஆனி 32, சஷ்டி
ஜூலை 18, ஆடி 2, அஷ்டமி
ஜூலை 20, ஆடி 4, கார்த்திகை
ஜூலை 21, ஆடி 5, ஏகாதசி
ஜூலை 22, ஆடி 6, பிரதோஷம்
ஜூலை 23, ஆடி 7, சிவராத்திரி
ஜூலை 24, ஆடி 8, அமாவாசை
ஜூலை 26, ஆடி 10, சந்திர தரிசனம்
ஜூலை 28, ஆடி 12, சதுர்த்தி
ஜூலை 30, ஆடி 14, சஷ்டி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |