குடும்ப பிரச்சனைகள் தீர பெண்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் யார்?
குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்.அது இயற்கை என்றாலும் சிலர் வீட்டில் அளவிற்கு அதிகமான பிரச்சனைகள் நடந்து கொண்டு இருக்கும்.அந்த நேரத்தில் செய்வதறியாது எல்லாரும் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து போவார்கள.அவ்வாறு இருட்டாக இருக்கும் நேரத்தில் நாம் சரண் அடையவேண்டியவள் சென்னையில் உள்ள காளிகாம்பாள் அம்மனை தான்.அம்மன் காளிகாம்பாள் நடத்திய அதிசயங்கள் பல.
கருணை கடலான அன்னை காளிகாம்பாளை மனதில் நினைத்தாலே மனதில் அமைதியும்,அன்பும் உண்டாகும். ஏன்,மகாகவி பாரதியார் சுதேசிமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபாது பிராட்வேயில் தங்கி இருந்தார். அப்போது அம்மா காளிகாம்பாளை வழிபாடு வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார்."யாதுமாகி நின்றாய் காளி" என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.
அத்தனை சிறப்புகள் கொண்டு இருப்பவள் தான் அம்மா காளிகாம்பாள்.பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே காளி என்று சொல்வார்கள்.ஆனால் இங்கு அருள்பாலிக்கும் அம்மா சாந்த சொரூபிணியாக பக்கதர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இவளை மனதில் நினைத்தால் போதும் அம்மா நமக்கு நல்வழி காட்டுவாள்.பெற்ற தாயிற்கு மேலாக அம்மா நம்மை அரவணைத்து நம் கவலைகள் தீர்ப்பாள்.சென்னையில் நீங்கள் இல்லை என்றாலும் எந்த இடத்தில் இருந்தாலும் அம்மனை மனதில் ஒரு நிமிடம் நினைத்தாலே போதும் அம்மா அருகில் வந்து நம் கவலைகள் நீக்குவாள்.
அதிலும் பெண்கள் கட்டாயம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர துயர் நீங்கி மனதில் அமைதியோடு எல்லாவற்றையும் தைரியமாக சமாளிக்க அம்மா காளிகாம்பாள் சரண் அடைவது மிக அவசியம்.
ஆக வீடுகளில் எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் வீட்டில் அம்மாவின் திரு உருவம் படம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் அதை கொஞ்சம் பார்த்து மனதார வேண்டடிக்கொள்ளுங்கள்.மனம் சாந்தி அடைவதை பார்க்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |