அட்சய திருதியை நாளில் நாம் மறக்க கூடாத முக்கியமான வரலாற்று சிறப்புகள்
இந்து மத பண்டிகைகளில் அட்சய திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த நாளில் நாம் எந்த ஒரு காரியங்கள் செய்தாலும் அவை இரட்டிப்பு பலன்களை கொடுக்கும். மேலும், இந்த அட்சய திருதியை நாளில் நாம் மறக்க முடியாத வரலாற்று சிறப்புகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. படைக்கும் தொழிலை செய்யும் பிரம்ம தேவன் அட்சய திருதியை நாளில் தான் உலகத்தை படைத்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால், தான் உலக மக்களுக்கு தேவையான அனைத்தும் வற்றாது உற்பத்தி ஆகிக்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
2. ஏழை பெண் ஒருத்தி ஆதிசங்கரருக்கு அவளின் வறுமை சூழ்நிலையும் பொருட்படுத்தாமல் நெல்லிக்கனியை தானம் கொடுத்துள்ளார். இதனால் மனம் குளிர்ந்த ஆதிசங்கரர் ஏழை பெண்ணிடம் உனக்கு பிடித்த வறுமை உன்னை விட்டு விலகும் என்று கூறி செல்வத்திற்கு அதிதேவதையான ஸ்ரீமகாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஏழை பெண்ணின் வறுமையை போக்க தங்க நெல்லிக் கனிகளை மழையாக பொழியச் செய்தார்.
3. அட்சய திருதியை நாளில் தான் கிருஷ்ணன் வறுமையில் வாடிய தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி சாப்பிட்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.
4. மகா விஷ்ணுவின் அதிபதி கிழமையான புதன்கிழமையும் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியும் இணைந்து வரும் அட்சய திருதியை நாளில் அட்சய திருதியை மகாலட்சுமி தேவி மற்றும் நாராயணர் படம் வாங்கி வீட்டில் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடி, குசேலர் கதை படித்து அவல் பாயாசம் படைத்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு உண்டான தலைமுறை வறுமையும் தீராத பொருளாதார சிக்கல்களும் விலகும் என்பது நம்பிக்கை.
5. திருமணம் என்பது சாதாரணம் விஷயம் அல்ல. அப்படியாக, திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்கு கடன் வழங்கிய குபேரன் அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை வழிபட்டு சங்கநிதி, பதும நிதியை பெற்றதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்தால் குறையாத செல்வமும், சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று பரிபூர்ண அருளோடு வாழலாம் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |