ஆகஸ்ட் மாதத்தில் கோடீஸ்வர யோகம் யாருக்கு? இந்த தேதியில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலி
ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த தேதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்குவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எண் கணிதத்தின் படி, பிறந்த தேதியின் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்க முடியும்.
ஆகஸ்ட் மாதம் தொழில், வியாபாரம், காதல் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் பல புதிய வாய்ப்புகளை கொண்டு வரக்கூடும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த தேதியை வைத்து அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்ளலாம்.
1, 10, 19, 28 தேதியில் பிறந்தவர்கள்
ஆகஸ்ட் மாதத்தில் மேலே கூறப்பட்டுள்ள தேதியில் பிறந்தவர்களுக்கு சுபமாக இருப்பதுடன், தன்னம்பிக்கை அதிகரிக்கவும் செய்கின்றது.
நீங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறத் தொடங்குவதுடன், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
3, 12, 21, 30 தேதயில் பிறந்தவர்கள்
ஆகஸ்ட் மாதத்தில் மேலே கூறப்பட்டுள்ள தேதியில் பிறந்தவர்கள் புதிய தொழிலைத் தொடங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்குமாம்.
மேலும் முதலீடு செய்வதற்கு சாதகமான நேரமாக இருப்பதுடன், பணியில் பாராட்டுகளும் கிடைக்குமாம்.
வியாபாரத்தில் திடீரென்று ஒரு பெரிய விடயம் நடைபெறும் நிலையில், புதிய வருமான ஆதாரங்கள் திறக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
6, 15, 24 தேதியில் பிறந்தவர்கள்
6, 15, 24 தேதியில் பிறந்தவர்களுக்கு நன்மையாக அமையுமாம். வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன், சம்பளத்துடன் கூடுதல் சலுகைகளும் கிடைக்கலாம்.
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், உங்கள் மனம் வேலையில் அதிக கவனம் செலுத்தும். குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்கும்.
மற்ற ஆதாரங்களில் இருந்து பணம் வரும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







