இந்தியாவில் மிகவும் மர்மம் நிறைந்த கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?
உலகத்தில் நடக்கும் சில விஷயங்களுக்கு முழுவதுமாக விடைகிடைப்பது இல்லை.அதில் ஒன்று தான் மர்மம் நிறைந்த சில இடங்கள்.அதாவது நல்ல சக்தி என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக தீய சக்திகள் இருக்கும்.
அந்த சக்திகளின் வெளிப்பாட்டை சமயங்களில் நம்மால் நம்பமுடியாமல் ஆச்சிரியத்தில் மூழ்கிவிடுவோம்.அப்படியாக இந்தியாவில் பல மர்மமங்கள் நிறைந்த கோயிலாக ராஜஸ்தானில் ஒரு அனுமன் கோயில் உள்ளது.அந்த கோயிலின் மர்மங்களை பலரும் புரிந்து கொள்ளமுடியவில்லை.அதை பற்றி பார்ப்போம்.
ராஜஸ்தானில் மெஹந்திபூர் பாலாஜி கோயில் இந்தியாவில் உள்ள பிற கோயில்கள் போல் அல்லாமல் வித்தியாசமாகவும் மர்மம் நிறைந்தவையாகவும் திகழ்கிறது.
மேலும்,மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்கு மனம் பலவீனமானவர்களால் செல்லமுடியாது என்றும் அதே சமயம் அங்கு நடக்கும் விஷேச சடங்குகள் மக்களை மிகவும் மர்மமான முறையில் ஈர்க்கிறது என்று சொல்லப்படுகிறது.
வாழ்க்கையில் திடீர் என்று கெட்ட நேரத்தால் சூழப்பட்டவர்கள்,பிறரால் செய்வினை,பில்லி சூனியம் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து அவர்களுடைய கஷ்டத்தை போக்கிக்கொள்வதாக சொல்கிறர்கள்.
இக்கோயிலுக்கு ஒரு முறை சென்று வர நம் உடலில் ஏதேனும் தீய சக்திகளால் தாக்கம் ஏற்பட்டு இருந்தால் அவை விலகி வாழ்க்கை வளமாகும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் இக்கோயிலில் மிக முக்கிய நிகழ்வாக பேய் விரட்டுதல் அமையப்பெற்று உள்ளது.
அதாவது மனிதன் ஏதேனும் கெட்ட சக்திகள் நடமாட்டம் உள்ள இடத்திற்கு சென்று பாதிப்புகளை அடைந்திருந்தால் அவர்கள் ஒருமுறை இந்த ஹனுமான் ஆலயம் வர அந்த கெட்ட சக்திகள் அவர்கள் உடலை விட்டு விலகி அவர்கள் குணம் அடைகிறார்கள் என்று ஆழமாக நம்பப்படுகிறது.
இந்த நிகழ்விற்கு பெயர் ஜாதுய் சிகிச்சை’ அல்லது ‘தெய்வீக சிகிச்சை’ என்று சொல்கிறார்கள். மேலும்,ஒருவர் இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் மிகவும் கடுமையான விரதத்தை பின்பற்றிய பிறகே செல்லமுடியும்.
அதாவது குறைந்தது அந்த நபர் ஒரு வார காலத்திற்கு எந்த ஒரு அசைவ உணவும் உட்கொள்ளக்கூடாது.அதே சமயம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை சாப்பிடவோ வீட்டிற்கு எடுத்து செல்லவோ கூடாது.
அதற்கு பதிலாக, அவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்ல வேண்டும். இது கோயிலின் பழக்க வழக்கங்களில் ஆழமாக வேரூன்றிய ஒரு சடங்காகும்.
அர்ஜி, சவாமணி மற்றும் தர்காஸ்ட் போன்ற சடங்குகள் மூலம் தீய சக்திகள் அல்லது ஏதேனும் எதிர்மறை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதால் இக்கோயில் மக்கள் மத்தியில் பிரபலமாவும் சக்தி வாய்ந்த கோயிலாகவும் கருதப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |