ஜோதிடம்:இந்த உணவு பொருட்கள் கனவில் வந்தால் கவனமாக இருங்கள்
கனவு என்பது மனிதனுக்கு வரும் இயல்பான விஷயம் என்று ஒரு பொழுதும் கடந்து விடமுடியாது.காரணம் கனவுகள் நம்முடைய வாழ்க்கையில் தொடர்புடையது.நமக்கு வரும் கனவிற்கு பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
அப்படியாக ஒரு சிலருக்கு சில உணவுகளை சாப்பிடுவது போல் கனவு வரும்.அவ்வாறு வரும் கனவுகளுக்கு சாஸ்திரத்தில் என்ன காரணம் சொல்லப்படுகிறது என்று பார்ப்போம்.
1.கனவில் நெல்லிக்காய் சாப்பிடுவது போல் வந்தால் உங்கள் செல்வம் வளம் பெருகும் என்றும் உங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது என்றும் நம்பப்படுகிறது.ஆதலால் நெல்லிக்காய் சாப்பிடுவது போல் கனவு வருவது நன்மையாக கருதப்படுகிறது.
2.ஒருவர் இஞ்சி சாப்பிடுவது போல் கனவு வந்தால் சமுதாயத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்க உள்ளது என்று அர்த்தம். நீங்கள் இழந்த மாறியதையை மீண்டும் பெறுவீர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
3. கனவில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது போல் வந்தால் உங்களுக்கு கஷ்ட காலம் ஆரம்பமாகிறது இருந்தாலும் வாழ்க்கையில் எதுவும் நிலையானது அல்லது போல்,அந்த கஷ்டமும் விரைவில் முடிந்து மிக பெரிய மகிழ்ச்சி அடைவீர்கள் என்று சொல்லப்படுகிறது.
4.உங்கள் கனவில் நீங்கள் இனிப்பு சாப்பிடுவது போல் வந்தால் உங்கள் வீட்டில் விரைவில் நற்செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
5.இந்து மத சாஸ்திரத்தில் மாம்பழம் ஒரு ஆன்மீக கனியாக பார்க்கப்படுகிறது.அவ்வாறு உங்கள் கனவில் மாம்பழம் வந்தால் உங்களுக்கு இறைநாட்டம் அதிகரிக்கும் என்றும்,தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |