இன்றைய ராசி பலன்(29-03-2025)

Report

 மேஷம் :

இன்று சிலருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தீர ஆலோசித்து செயல்படுவது நன்மை தரும். உங்களுக்கான எதிர்ப்புகள் விலகினாலும், பிறரிடம் பேசும் பொழுது மிக கவனமாக பேச வேண்டும்.

ரிஷபம் :

இன்று நினைத்த வேலை முடிய கொஞ்சம் தாமதம் ஆகலாம். நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதை தவிர்க்க வேண்டும். தாய் தந்தையிரிடம் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. 

மிதுனம் :

உங்கள் வியபாரத்தில் நல்ல லாபம் பெருகும். குடும்பத்தில் சண்டையால் பிரிவு உண்டாக வாய்ப்புள்ளது. இன்று சில அவமானங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆதலால் கவனம் அவசியம். 

கடகம் : 

இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர்.

சிம்மம் :

திட்டமிட்ட வேலைகளை செய்ய தவறிவிடுவீர்கள். அலுவலகத்தில் உடன் பணி செய்யும் நபரிடம் கவனமாக இருப்பது நல்லது. இன்று மனம் பதட்டமாக இருந்தாலும் நிதானம் அடைய இறைவழிபாடு செய்யலாம்.

கன்னி :

வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும். நண்பர்கள் ஆதரவுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர்.

இரட்டை ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட பணமழை பெரும் 3 ராசிகள்

இரட்டை ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட பணமழை பெரும் 3 ராசிகள்

துலாம் :

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒரு சிலர் வெளியூர் செல்ல நேரிடலாம். நன்மையான நாள்.

விருச்சிகம் :

கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

தனுசு :

இன்று உங்கள் பிள்ளைகள் எண்ணி சந்தோசம் அடைவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு உண்டாகும். குலதெய்வ வழிபாடு சந்தோஷத்தை கொடுக்கும்.

மகரம் :

ஒரு சிலர் புதிய சொத்துக்கள் வாங்க திட்டமிடுவார்கள்.  சகோதரர்கள் உதவியுடன் வேலைகள் நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குரு பார்வை படுவதால் முயற்சி வெற்றியாகும்.

கும்பம் :

திட்டமிட்ட வேலை திட்டமிட்டபடி நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

மீனம் : 

இன்று உங்கள் மனதில் நம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US