இன்றைய ராசி பலன்(07-08-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த அலைச்சல் குறையும். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தொழிலில் புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறப்போகிறீர்கள்.
மிதுனம்:
இன்று நீங்கள் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவீர்கள். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய நாள். இடப் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். அலுவலகத்தில் உங்களுக்கான மரியாதை கிடைக்கும்.
கடகம்:
இன்று உங்களின் நீண்ட நாள் ஆசைகளும் கனவுகளும் நினைவாகும். எதிர்பார்த்த பணம் கைகளுக்கு வந்து சேரும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.
சிம்மம்:
வாகனங்களில் மிகவும் கவனமாக செல்ல வேண்டிய நாள். அரசியல் தொடர்புகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை தேடிக் கொடுக்கும்.
கன்னி:
உடன் பிறந்தவர்களால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உண்டாகலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண விஷயங்களில் கவனம் தேவை.
துலாம்:
தேவையில்லாத மனக்குழப்பங்களை தவிர்க்க வேண்டும். உடல் நிலையில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். பேசும் பொழுது வார்த்தைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயம் இன்று உங்களை தேடி வரும். கணவன் வழி உறவால் நன்மைகள் உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தந்தை உடல் நிலையில் முன்னேற்றம் காணலாம்.
தனுசு:
குடும்பத்தில் தேவையில்லாத சிக்கல்களை சந்திக்ககூடும். பிள்ளைகள் உடல் நிலையில் சில பாதைகள் உருவாகும். அக்கம் பக்கத்தினரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.
மகரம்:
இன்று உங்களை பிடிக்காதவர்கள் உங்களுக்கு சில தொந்தரவுகள் தரலாம். எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.
கும்பம்:
மருத்துவர்களுக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நாள். வியாபாரத்தில் சில தடைகளை தாண்டி வெற்றி அடைவீர்கள். தாய் மாமன் உறவால் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்:
வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகள் தொல்லை விலகும். உறவினர்களிடம் கவனமாக பேச வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







