இன்றைய ராசி பலன்(22-05-2025)
மேஷம்:
இன்று நண்பர்கள் இடையே சில சங்கடமான சூழ்நிலை உருவாகும். மனதில் பதட்டமும் பயமும் தோன்றும். உணவு பழக்க வழக்கங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முன்னோர்கள் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம்:
வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் விலகும். எதையும் பொறுமையாக கையாள்வது அவசியம். புதிய நபர்களின் அறிமுகத்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும். வாங்கிய கடனை அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்:
கடந்த கால தவறுகளை சரி செய்ய விரும்புவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை இன்று செய்வதை தவிர்க்க வேண்டும். கவன சிதறல் உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
மேற்கொள்ளும் முயற்சிக்கு குல தெய்வத்தின் அருள் துணை இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். சிந்தித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செலவிற்கேற்ற வரவு வரும்.
சிம்மம்:
உங்கள் வாழ்க்கையில் தேவை அற்ற பிரச்சன்னைகள் தேடி வரும். சிலருக்கு மறைமுகமான எதிரிகள் தொல்லை விலகி செல்வார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை ஒன்று எளிதாக முடியும்.
கன்னி:
நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வருவாய் அமையும். புதிய அலுவலகம் மாறவேண்டும் என்று இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.
துலாம்:
உங்கள் விருப்பம் நிறைவேறும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாட்காளாக எதிர்பார்த்த பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். தாய் வழி உறவால் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி காணும் நாள்.
விருச்சிகம்:
நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பணம் வரும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். எந்த செயலிலும் எச்சரிக்கை அவசியம். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை உருவாகும். முயற்சிகளில் தடை தோன்றும்.
தனுசு:
இன்று குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் பிரச்சனைகளை தவிப்பீர்கள். தொழிலில் உண்டான பாதிப்புகள் விலகி செல்லும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.
மகரம்:
திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். எதிரிகள் விலகிச் செல்வர். உங்கள் எண்ணம் நிறைவேறும். வேலையில் ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு தேடிவரும். செல்வாக்கு உயரும் நாள்.
கும்பம்:
எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.
மீனம்:
இன்று தெளிவான சிந்தனைகளுடன் செயல்படுவதால் வெற்றிகள் கிடைக்கும். செய்யும் வேலையில் நிதானம் அவசியம். நீங்கள் செய்யும் வேளையில் எதிர்பாராத பின் விளைவுகளை கொடுக்கும். விருப்பங்கள் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |