இன்றைய ராசி பலன்(21.11.2024)
மேஷம்
அலுவலகத்தில் சற்று கவனமாக இருப்பது அவசியம்.வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.வியாபாரத்தில் வரவிற்கு ஏற்ற செலவு வரும்.அமைதி காப்பது நன்மையை தரும்.
ரிஷபம்
வேலைக்காக மேற்கண்ட முயற்சியில் வெற்றி கிடைக்காமல் போகலாம்.மனம் பதட்டம் அடைந்தாலும் நிதானமாக இருப்பது அவசியம்.மதியம் மேல் நினைத்தது நடக்கும்.
மிதுனம்
உங்கள் எதிரிகளை கண்டு கொள்வீர்கள்.செய்த் தவறுக்காக வருந்துவீர்கள்.இறைவழிபாடு மன அமைதியை கொடுக்கும்.நட்பு வட்டாரத்தின் ஆலோசனை உங்களுக்கு முன்னேற்றத்தை வழங்கும்.
கடகம்
மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடை. சிந்தித்து செயல்படுவதால் சிரமம் குறையும். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சிம்மம்
செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய திட்டங்களோ முயற்சியோ இன்று வேண்டாம்.நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர். பிறருக்கு பணம், பொருள் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.
கன்னி
உங்கள் விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடத்தில் இருந்து விடுபடுவீர்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
துலாம்
வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.உங்களால் பிறருக்கு உதவிகரமாக இருக்கும்.குலதெய்வம் வழிபாடு மன அமைதி கொடுக்கும்.குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
விருச்சிகம்
உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோர் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை லாவகமாக கையாள்வீர். உங்கள் முயற்சி லாபம் தரும்.
தனுசு
உடல் நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றலாம்.பிள்ளைகள் உங்கள் மேல் அக்கறையாக இருப்பார்கள்.இருந்தாலும் யாருக்கும் வாக்குறுதியும் புதிய முயற்சிகளும் தொடங்குவதை தவிர்ப்பது நன்மையில் அமையும்.
மகரம்
பூமி சம்பந்தமான பிரச்னை தீரும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நண்பர்களால் லாபம் காண்பீர்.எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். மனக்குழப்பம் தீரும்.
கும்பம்
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.வழக்கு விவகாரம் சாதகமாகும்.குடும்பத்தினர் விருப்பம் நிறைவேற்றுவீர்.
மீனம்
நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும்.சொத்து சம்பந்தமான விஷயங்களில் உள்ள பிரச்சனை முடிவிற்கு வரும்.பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள்.உறவினர் தக்க சமயத்தில் உதவி புரிவர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |