இன்றைய ராசி பலன் (10-06-2025)

Report

மேஷம்:

இன்று விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முடிந்த வரை இன்று எந்த ஒரு புதிய முயற்சிகளையும் எடுக்க வேண்டாம். பிறரிடம் பேசும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். நண்பர்களால் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் பயணம் நீங்கள் எதிர்பார்த்தது போல் அமையும்.

மிதுனம்:

உங்கள் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் தீரும். வியாபாரத்தில் இருந்தால் போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி செல்லும்.

கடகம்:

மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்: 

சிறு தொழில் செய்பவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இன்று எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் ஏற்படலாம். கடன் கொடுத்தவர்கள் தொந்தரவுகள் கொடுக்கலாம்.

மன குழப்பங்கள் விலக நாளை (10-6-2025) பௌர்ணமி அன்று இந்த விஷயங்களை செய்யுங்கள்

மன குழப்பங்கள் விலக நாளை (10-6-2025) பௌர்ணமி அன்று இந்த விஷயங்களை செய்யுங்கள்

கன்னி:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். தாய் தந்தை வழி உறவால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

துலாம்:

மனதில் தெளிவு பிறக்கும். சிலருக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களை வந்து சேரும். மதியம் மேல் மனம் அமைதி நிலவும்.

விருச்சிகம்:

மனக்குழப்பம் தீரும். தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம்.

தனுசு:

பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வது நன்மை தரும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகாமல் பார்த்து கொள்வது நல்லது.

மகரம்:

நண்பர்கள் உதவி நன்மை தரும். வராமல் இருந்த பணம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர். நீங்கள் மேற்கொள்ளும் செயலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 

கும்பம்:

உங்கள் வேலை ஆதாயத்தில் முடியும். சிறு வியாபாரிகள் நன்மை அடைவர். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மீனம்:

இன்று சிலருக்கு அலைச்சல் அதிகரிக்கும். உங்களுக்கு மூன்றாம் நபரின் ஆதரவுகள் கிடைக்கும். எதையும் தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US