இன்றைய ராசி பலன்(09-03-2025)
மேஷம்:
இன்று வியாபாரத்தில் பணி சுமை அதிகரிக்கலாம்.மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றும்.வண்டி வாகனத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
ரிஷபம்:
இன்று உங்கள் திறமை வெளிப்படும்.உங்கள் பண்பால் நினைத்ததை சாதிப்பீர்கள்.வெளியூர் பயணம் சில சங்கடங்களை கொடுக்கலாம்.உங்கள் வேலையில் சரியான திட்டமிடல் தேவை.
மிதுனம்:
மனதில் உங்களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் விலகும்.குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.சகோதரன் வழியே சில எதிர்ப்புகளை சந்தித்தாலும் மதியம் மேல் எல்லாம் சரி ஆகும்.
கடகம்:
வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும்.
சிம்மம்:
இன்று உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.சொந்தங்களை சந்திப்பதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.எதையும் யோசித்து முடிவு செய்வீர்கள்.நன்மையான நாள்.
கன்னி:
உங்கள் வேலைகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.புதிய திட்டம் கை கொடுக்கும்.
துலாம்:
சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை உருவாகலாம்.எதிர்பாரா செய்திகள் வந்து சேரும்.குடும்பத்தினர் உங்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவார்கள்.
விருச்சிகம்:
குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற மோதல் ஏற்படும். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். வார்த்தைகளில் கவனம் தேவை.நற்செய்திகள் கிடைக்கும்.
தனுசு:
வீட்டில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.நீண்ட நாள் பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.எதையும் எதிர்கொள்ளும் மன தைரியம் பிறக்கும்.நம்பிக்கையான நாள்.
மகரம்:
அரசாங்க வேலை தொடர்பாக வேலை கிடைக்கும். இன்று வழக்கு விஷயத்தில் கவலைகள் ஏற்படும். சக ஊழியர்களால் மன அழுத்தமான சூழ்நிலை ஏற்படும்.
கும்பம்:
டும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். கண் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தர வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
மீனம்:
சிலருக்கு இன்று பிள்ளைகள் மீது தவறான புரிதல் உண்டாகலாம்.நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.மனைவி வழி உறவால் ஆதரவு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |