இன்றைய ராசி பலன்(11-03-2025)
மேஷம்:
இன்று உங்கள் முயற்சிக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். சிலர் மதியம் மேல் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளது. வயிற்று பிரச்சனை சம்பந்தமான விஷயங்களில் கவனம் அவசியம்.
ரிஷபம்:
மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். சிலருக்கு தாய் வழி உறவால் பிரச்சனைகள் வரலாம். தீர ஆலோசனை செய்து முடிவு செய்வது நன்மை அளிக்கும்.
மிதுனம்:
இன்று உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நபரை சந்திக்கலாம். சுயமாக முடிவு எடுப்பது அவசியம். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
கடகம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர். வியாபாரம் செய்யும் இடத்தில் நிதானம் தேவை.
சிம்மம்:
வியாபாரத்தில் சில தொந்தரவுகளை சந்திக்கலாம். பெற்றோர் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். உங்கள் திறமைக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும்.
கன்னி:
இன்று உங்களுக்கு அற்புதமான நாளாக அமைய போகிறது. பிரிந்த சென்ற உறவுகள் உங்களை தேடி வரும். பலரும் உங்களை பார்த்து பொறாமை பட வாய்ப்புள்ளது.
துலாம்:
இன்று நாள் முழுவதும் உடல் சோர்வாக காணப்படுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். மனம் குழப்பம் அடையும்.
விருச்சிகம்:
வரவேண்டிய பணம் வரும். பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.
தனுசு:
இன்று உங்களுக்கு நெருக்கடியான பண சூழல் உருவாகலாம். உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண் பிள்ளைகள் விஷயங்களில் கவனமாக கையாள வேண்டும்.
மகரம்:
ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். நண்பர்களால் முயற்சியில் வெற்றி காண்பீர். நினைப்பது நடந்தேறும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
கும்பம்:
உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். நேற்று இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும்.
மீனம்:
இன்று உங்கள் மன நிலையில் சில மாற்றங்கள் உருவாகலாம்.தேவை இல்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு மதியம் மேல் வீண் சண்டைகள் சந்திக்க வாய்ப்புள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |