இன்றைய ராசி பலன் (12-04-2026)

Report

மேஷம்:

ஒரு சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உடன் பிறந்தவர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு ஆறுதலாக அமையும்.

ரிஷபம்:

கல்வியில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையுடன் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்:

உடல் சோர்வு உண்டாகும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். கடந்த கால பிரச்சனைகளை சரி செய்ய முயற்சி செய்வீர்கள். சிந்தனை நிறைந்த நாள்.

கடகம்:

உணர்வுபூர்வாமாக செயல்படாதீர்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். தந்தை உடல் நிலையில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். மதியம் மேல் மனதில் தெளிவு பிறக்கும்.

2026: அட்சய திருதியை அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்பவர்கள் கவனத்திற்கு..

2026: அட்சய திருதியை அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்பவர்கள் கவனத்திற்கு..

சிம்மம்:

பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். குடும்பத்தில் சில சண்டை சச்சரவுகள் வரலாம்.

கன்னி:

இன்று குடும்பத்தில் சில விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்:

மனதில் தெளிவு பிறக்கும். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் உருவாகும். குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்துக் கொள்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் நாள்.

விருச்சிகம்:

வங்கி தொடர்ப்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும். தாய் வழி உறவுகளால் இருந்து வந்த சங்கடம் விலகும். புதிய நட்புகளின் அறிமுகத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

12 ராசிகள் படி உங்களுக்கு இவர்களை பிடிக்கவே பிடிக்காதாம்.. யார் தெரியுமா?

12 ராசிகள் படி உங்களுக்கு இவர்களை பிடிக்கவே பிடிக்காதாம்.. யார் தெரியுமா?

தனுசு:

சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் நாள். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். வருமானம் உயரும் நாள்.

மகரம்:

உங்கள் வீடுகளில் காலை முதல் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நன்மையான நாள்.

கும்பம்:

பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரம் விரிவு தொடர்பாக சில முக்கியமான ஆலோசனைகள் செய்வீர்கள். சிலருக்கு குடும்பத்தை பற்றிய மன கவலை உண்டாகும்.

மீனம்:

இன்று பிள்ளைகளின் நலனுக்காக முக்கியமான விஷயங்கள் செய்யவேண்டும் என்று கருதுவீர்கள். மனைவி உடல் நிலையில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நாள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US