இன்றைய ராசி பலன்(26.07.2024)
மேஷம்
நேற்று நிறைவேறாமல் போன முயற்சி இன்று நிறைவேறும்.குடும்பத்தினருடன் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.குல தெய்வ வழிபாட்டால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
ரிஷபம்
நீண்ட நாள் திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.வெளியூர் பயணத்தால் சோர்வு ஏற்படலாம்.
மிதுனம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படாமல் போகலாம்.எடுக்கும் முயற்சி எளிதாக நிறைவேறும்.மனதில் உள்ள விருப்பம் நிறைவேறும்.வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
கடகம்
வியாபாரத்தில ஏற்பட்ட வரவு செலவுகளை சரிசெய்வீர்கள்.குடும்பத்தினர் விருப்பத்தை அறிந்து நடந்து கொள்வீர்கள். நீண்ட நாள் கைக்கு வரவேண்டிய பணம் வந்து வரும்.
சிம்மம்
இன்று எடுக்கும் புதிய முயற்சியை தள்ளி வைப்பது நல்லது.திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.வெளியூர் பயணத்தில் எச்சரிக்கைஅவசியம்.
கன்னி
வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.வேலையில் கவனம் சிதறல்கள் ஏற்படலாம்.கவனமுடன் செயல்படுவது நல்லது.
துலாம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும்.சிந்தித்து செயல்படுவீர்கள் . நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சிந்தித்து செயல்பட்டு லாபமடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்கள் நல்ல வரன் அமையும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
தனுசு
உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக முயற்சி செய்யவேண்டும்.பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர்கள்.
மகரம்
துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.உங்கள் வேலையில் திருப்பம் ஏற்படும். போட்டி அதிகரிக்கும். பணியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
கும்பம்
உங்கள் செயல்களில் தடை தோன்றும். முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும். திட்டமிட்டிருந்த வேலை திட்டமிட்டபடிசெய்து முடிப்பீர்கள்.நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
மீனம்
நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் லாபம் உண்டாகும். தெய்வ வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும்.மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |