நாளைய ராசி பலன் (10-02-2026)
மேஷம்:
இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வருமானத்தை உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
ரிஷபம்:
இன்று உங்களின் புத்திசாலியான செயலுக்கு அலுவலத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும் நாள். முடிந்த வரை ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். சமுதாயத்தில் பெரியவர்களின் நட்புகள் கிடைக்கும்.
மிதுனம்:
சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரி ஆகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.
கடகம்:
திருமணம் தொடர்பான பேச்சுக்கள் நல்ல முறையில் முடியும். நட்புகள் வட்டாரம் விரிவடையும். குடும்பத்தினருடன் கோயில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:
உங்களின் சொந்த விஷயங்களை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். வீண் மருத்துவ செலவுகள் சந்திக்கலாம்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். முகம் தெரியாத நபர்களிடம் சற்று கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.
துலாம்:
மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் புதிய தொடக்கம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் அதிக அளவில் கவனம் செலுத்தும். தந்தை வழியில் நல்ல ஆதரவு பெறுவீர்கள்.
விருச்சிகம்:
மன்னிக்கும் குணத்தை வளர்த்து கொள்ளுங்கள். உங்களை பற்றி வீண் விமர்சனங்களை சிலர் சொல்லலாம். வேலையில் இருந்த பிரச்சனை விலகும். திடீர் அலைச்சல் உண்டாகும் நாள்.
தனுசு:
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை நல்ல முடிவை பெரும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பிள்ளைகளுக்காக முக்கியமான விஷயம் செய்வீர்கள். குழந்தைகளிடம் நேரம் செலவு செய்வீர்கள்.
மகரம்:
திருமணம் தொடர்பான பேச்சுக்களில் இருந்து வந்த பிரச்சனை விலகும். உங்களை விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும்.
கும்பம்:
திடீர் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இருப்பினும் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். மதியம் மேல் மனம் சற்று பதட்டத்துடன் காணப்படும்.
மீனம்:
வேலை பளு அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தொடர் பயணங்கள் மேற்கொள்ளும் நிலை வரலாம். உறவினர்கள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |