இன்றைய ராசி பலன்(21.02.2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு எதிராக அலுலகத்தில் சிலர் செயல்படுவார்கள்.நீண்ட நாள் உங்கள் மனக்குழப்பம் விலகும்.உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.விழிப்புடன் செயல்படவேண்டிய நாள்.

ரிஷபம்:

எதையும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும்.தொழில் ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.பெற்றோர்கள் உடல்நிலையில் கவனமாக இருக்கவேண்டும்.

மிதுனம்:

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.பிறரால் செய்ய முடியாத வேலையை செய்து முடிப்பீர்கள்.வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாக அமையும்.நன்மையான நாள்.

கடகம்:

குடும்பத்தினர் செயல்பாடுகளால் மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

சிம்மம்:

உங்களை சுற்றி இருப்பவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள்.இன்று எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம்.நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கன்னி:

நீங்கள் எதிர்பார்த்த பணம்வரும். தொழில் முன்னேற்றமடையும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வியாபாரத்தில் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும்.

துலாம்:

இன்று இறைநம்பிக்கை மனதில் அதிகரிக்கும்.நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.உடல் நிலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.உங்கள் மதிப்பு உயரும்.

தமிழ்நாட்டில் காசிக்கு நிகரான ஆலயம் எங்கு இருக்கிறது தெரியுமா?

தமிழ்நாட்டில் காசிக்கு நிகரான ஆலயம் எங்கு இருக்கிறது தெரியுமா?

விருச்சிகம்:

இன்று அனைவரையும் அனுசரித்துச்செல்வது நல்லது. தேவையற்ற பிரச்னை தேடி வரும். வருமானத்தில் தடை உண்டாகும்.ஒருசிலர் உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுப்பார்கள்.

தனுசு:

இன்று வீண் அலைச்சல் உருவாகும்.மிக கவனமுடன் செயல்படவேண்டும்.கணவன் மனைவி இடையே புரிதல் உருவாகும்.ஒரு சிலருக்கு கோயில் வழிபாடு செல்லும் யோகம் கிடைக்கும்.

மகரம்:

எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கவனமாக செயல்பட்டு லாபம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உறவுகளால் உங்களுக்கான வேலை நடக்கும்.

கும்பம்:

வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். வரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

அலுவலகத்தில் உங்களுக்கான நெருக்கடிகள் விலகும்.சொந்தங்கள் பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் உருவாகும்.மனதில் சந்தோசம் உருவாகும்.ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் யோகம் வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US