நாளைய ராசி பலன் (13-07-2026)
மேஷம்:
சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். குழந்தைகளுடன் பிடித்த நேரத்திற்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். வேலை பளு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல் விலகும். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
மிதுனம்:
ஒரு சிலருக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரலாம். வேலையில் இடமாற்றம் மற்றும் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும் நாள். இருப்பினும் மன குழப்பம் மதியம் இருக்கலாம் பிறகு சரி ஆகும்.
கடகம்:
மனதில் புதுவித சிந்தனை தோன்றும். எதையும் சமாளித்து கொள்ளலாம் என்று தோன்றும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
சிம்மம்:
வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும். எந்த விஷயம் செய்யும் முன் பலமுறை யோசித்து ஆலோசனை செய்து முடிவு செய்வது அவசியம்.
கன்னி:
உங்களுக்கு குடும்பத்தின் மீது வெறுப்பு உண்டாகலாம். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி உங்களுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
விருச்சிகம்:
வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். ஆரோக்கியத்தில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தேவை இல்லாமல் பேசாதீர்கள்.
தனுசு:
குடும்பத்தில் நற்செய்தி வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.
மகரம்:
மனசோர்வு நீங்கும். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வழக்கு விஷயங்களில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். முக்கியமான நபரிடம் பரிசு பெறுவீர்கள்.
கும்பம்:
சினமா துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு புதிய நட்புகள் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.
மீனம்:
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று நிதானம் கடைப்பிடித்து பேசினால் நல்ல நாளாக அமையும். குடும்ப விஷயங்களை பற்றி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குலதெய்வ வழிபாடு மனக்குழப்பம் குறைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |