இன்றைய ராசி பலன்(08-06-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். சில முக்கிய நபர்களின் ஆலோசனையை பெறுவீர்கள். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்வீர்கள். உடலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். பொருளாதார ரீதியாக சந்தித்த தொல்லைகள் விலகி செல்லும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்:
பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம்:
சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தை ஒட்டி வெளியூர் பயணம் ஏற்படும். தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். சங்கடங்கள் நீங்கும். மனதில் சந்தோஷமும் உண்டாகும்.
சிம்மம்:
பிறர் சொல்லும் விமர்சனங்களை காதில் எடுத்துக்கொள்ள வேண்டாம். பிறரால் செய்யமுடியாத காரியங்களை நீங்கள் செய்து முடிப்பீர்கள். தொழிலில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகும்.
கன்னி:
புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் வியாபாரம் செழிப்பாக அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
துலாம்:
மனதில் தேவை இல்லாத பயமும் பதட்டமும் உண்டாகும். இன்று உங்கள் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். விலகி சென்ற நட்புகள் உங்களை தேடி வரும்.
விருச்சிகம்:
பணியாளர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும். வரவு செலவில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனப் பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும். திடீர் செலவால் சங்கடத்திற்கு ஆளாவீர்.
தனுசு:
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் உண்டாகாது. நட்பு வட்டாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்:
தொழில் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு ஆதாயமாக இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுக்கலாம்.
கும்பம்:
நீங்கள் எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிறரது பிரச்சனையில் தலையிடாதீர்கள். நன்மையான நாள்.
மீனம்:
வழக்கமான வேலையை செய்வதில் சிறு தடைகள் ஏற்படலாம். மனதில் இனம் புரியாத குழப்பமும் வருத்தமும் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |