இன்றைய ராசி பலன்(13-06-2025)

Report

 மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு காலை முதல் பிடிக்காத சில விஷயங்களில் ஈடுபாடு செலுத்தும் நிலை உண்டாகலாம். வெளியூர் பயணம் உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்:

திருமண தொடர்பான பேச்சுக்களில் மிகவும் கவனம் அவசியம். தாய் தந்தை வழியே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்றி மறையும்.

மிதுனம்:

கடந்த கால பிரச்சனைகளை பற்றி ஆலோசனை செய்வீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வீர்கள். சகோதரன் வழி உறவால் ஆதாயம் உண்டாகும். தொலைத்தூர பயணம் நன்மை உண்டாக்கும்.

கடகம்:

எதிர்காலம் பற்றிய சிந்தனையும் கவலையும் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட சவால்களை சந்திக்க நேரிடலாம். நன்மையான நாள்.

சிம்மம்:

வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தொழிலில் உண்டான நஷ்டத்தை சரி செய்வீர்கள். உறவுகளிடம் ஏற்ப்பட்ட பகை விலகும்.

கன்னி:

மாணவர்கள் படிப்பில் சில குழப்பங்கள் உண்டாகும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாம் நபரின் பேச்சை கேட்பதில் கவனம் தேவை. சங்கடங்கள் தோன்றி மறையும்.

துலாம்:

இன்று மனதில் தெளிவும் தைரியமும் பிறக்கும். ஒரு சிலருக்கு வேலையில் சந்தித்த சிக்கல்கள் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி உறவு பலப்படும்.

விருச்சிகம்:

பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

தனுசு:

இன்று பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள். கணவன் உங்களை புரிந்து நடந்து கொள்வார். மதியம் மேல் நீங்கள் எதிர்பாராத சில விஷயங்கள் உண்டாகும். கடன் தொல்லை விலகும்.

கும்பம்:

 உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாகனத்தால் செலவு தோன்றும்.

கும்பம்:  

பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.

மீனம்:

குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் நிறைவேறும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US