நாளைய ராசி பலன் (13-05-2026)

Report

 மேஷம்:

எதையும் பொறுமையாக கையாள்வது அவசியம். உடன் பிறந்தவர்களுக்காக சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வருமானத்தில் சந்தித்த தடை விலகும். நன்மையான நாள்.

ரிஷபம்:

உங்களிடம் தவறாக பேசியவர்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலை வரலாம். அரசியல் தொடர்பாக நீங்கள் பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.

மிதுனம்:

எதிரிகளிடம் தேவை இல்லாத வார்தைகள் பயன் படுத்தாதீர்கள். தாய் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். குடும்பத்தில் விருந்தினர் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

கடகம்:

வாழ்க்கை துணையை சற்று அனுசரித்து செல்வது அவசியம். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகலாம். ஆன்மீகத்தில் அதிக அளவில் கவனம் செலுத்துங்கள்.

எந்த ராசிக்காரர்கள் எந்த விரதம் மேற்கொண்டால் அதிர்ஷ்டம் தேடி வரும் தெரியுமா?

எந்த ராசிக்காரர்கள் எந்த விரதம் மேற்கொண்டால் அதிர்ஷ்டம் தேடி வரும் தெரியுமா?

சிம்மம்:

சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் படிப்பிற்கு சில முக்கிய செலவுகள் செய்வீர்கள்.

கன்னி:

வாழ்க்கை துணையிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வேலை பளுவால் உடல் சோர்வு உண்டாகலாம். கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம்:

படிப்பில் அதிக கவனம் செலுத்தவீர்கள். குடும்பத்தினரை பற்றி புரிந்துகொள்வீர்கள். பழைய விஷயங்களை மறக்கமுயற்சி செய்வீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் வரலாம்.

விருச்சிகம்:

சொந்தகளிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீண் பண செலவுகள் சந்திக்கலாம். வழக்கு விஷயங்களில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

2026: சனிஜெயந்தி எப்பொழுது? அன்று தவறியும் இந்த 4 தவறுகள் செய்யாதீர்கள்

2026: சனிஜெயந்தி எப்பொழுது? அன்று தவறியும் இந்த 4 தவறுகள் செய்யாதீர்கள்

மகரம்:

கலை துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளுக்கு முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். கடன் தொல்லையில் irunthu விடுபடுவீர்கள்.

கும்பம்:

வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

மீனம்:

காதல் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். யாருக்கும் தேவை இல்லாத வாக்கு உறுதிகள் கொடுக்காதீர்கள். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும் நாள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US