நாளைய ராசி பலன்(28-11-2025)

Report

மேஷம்:

குடும்பத்துடன் சிலர் குலதெய்வம் கோயில் சென்று வழிபாடு செய்வீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். மதியம் மேல் நன்மை உண்டாகும். சந்தோஷமான நாள்.

ரிஷபம்:

உங்கள் வேலையில் சந்தித்த எதிர்ப்புகள் யாவும் விலகும். உங்கள் மீது வெறுப்பு காட்டியவர்கள் நட்பாக மாறுவார்கள். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதில் சிரமம் உண்டாகும். சிலருக்கு திருமண வாழ்க்கையில் உள்ள சிக்கல் இன்னும் விரிவடையலாம். சொந்தங்கள் மத்தியில் கவனம் தேவை.

துலாம் ராசி பெண்களின் பலம் பலவீனம் என்ன தெரியுமா?

துலாம் ராசி பெண்களின் பலம் பலவீனம் என்ன தெரியுமா?

கடகம்:

வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். தெரிந்தவர்கள் வழியே உங்களுக்கு நன்மை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொழுது போக்கு விஷயம் தவிர்க்கலாம்.

சிம்மம்:

திடீர் பண பிரச்சனை சந்திக்கலாம். தேவை இல்லாமல் யாருக்கும் வாக்கு உறுதிகள் கொடுக்காதீர்கள். பிள்ளைகள் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி:

வீடுகளில் திடீர் குழப்பம் வரலாம். தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. உங்கள் எதிர்காலம் பற்றிய கவலை பயம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் சண்டை தவிர்த்து விடுங்கள்.

துலாம்:

மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு நண்பர்கள் வழியே உதவிகள் கிடைக்கும். நன்மையான நாள்.

விருச்சிகம்:

தேவை இல்லாத விஷயங்களில் உங்கள் பங்கு செலுத்தாதீர்கள். வீண் வாக்குவாதம் மற்றும் பிறர் பற்றிய கருத்துக்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையால் நன்மை கிடைக்கும்.

தடைகள் விலகி ஞானம் பெற கட்டாயம் ஒரு முறை தரிசிக்க வேண்டிய உச்சிஷ்ட கணபதி

தடைகள் விலகி ஞானம் பெற கட்டாயம் ஒரு முறை தரிசிக்க வேண்டிய உச்சிஷ்ட கணபதி

தனுசு:

குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். உங்களின் பேச்சுக்கு மரியாதை மற்றும் முக்கியத்துவம் கிடைக்கும் நாள். முன்னோர்கள் வழிபட்டால் நன்மை அடைவீர்கள்.

மகரம்:

சிலருக்கு காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகும். உங்கள் வீடுகளில் சந்தித்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நன்மை பெறுவீர்கள். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

கும்பம்:

உங்கள் நட்பு வட்டாரத்தில் உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் விலகி செல்வார்கள். நீண்ட நாள் மனதில் இருந்த கவலை விலகும். தொழில் ரீதியாக சந்தித்த பிரச்சனை நல்ல முடிவு பெரும்.

மீனம்:

பிள்ளைகள் பற்றிய கவலை விலகும் நாள். சொந்தங்கள் மத்தியில் சந்தித்த சங்கடத்தை சரி செய்வீர்கள். சகோதரி உறவால் நன்மை உண்டாகும். மாலை மேல் முக்கிய நபரை சந்திப்பீர்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US