இன்றைய ராசி பலன் (29-09-2026)

Report

மேஷம்:

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிந்தனைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்:

அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். எதிலும் முன்கோபம் இன்றி இருப்பது நல்லது. வெளிநாடு செல்லும் பயண வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்:

இன்று உங்கள் தோற்றபொலிவுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான முடிவு எடுக்கும் நாள். மனதில் புதிய இலக்குகள் நோக்கி செல்வீர்கள்.

பல்லாயிரம் ஆண்டுகள் தவம்.. ஆனால் கண நேர ஆணவம் எல்லாம் அழித்துவிட்டது

பல்லாயிரம் ஆண்டுகள் தவம்.. ஆனால் கண நேர ஆணவம் எல்லாம் அழித்துவிட்டது

கடகம்:

சமுதாய காரியங்களில் பங்கு கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். மாற்றம் காணும் நாள்.

சிம்மம்:

விலை உயர்ந்த பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நினைத்தது போல் நடக்கும். தேவை இல்லாத பேச்சுக்கள் தவிர்ப்பது நல்லது.

கன்னி:

மனதில் ஆயிரம் சிந்தனைகள் வந்து செல்லும். வாழ்க்கையில் முக்கியமான தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

துலாம்:

உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். சகோதர வழியில் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். வேலையில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

விருச்சிகம்:

சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சக ஊழியர்களிடம் முன்னுரிமை ஏற்படும். வியாபாரத்தில் உங்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகாளய பட்சத்தில் 15 நாட்களும் தர்ப்பணம் கொடுப்பது ஏன்? கடைபிடிக்க வேண்டிய 8 விதிகள்

மகாளய பட்சத்தில் 15 நாட்களும் தர்ப்பணம் கொடுப்பது ஏன்? கடைபிடிக்க வேண்டிய 8 விதிகள்

தனுசு:

எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். குழந்தைகளின் வழியே அலைச்சல்கள் உண்டாகும். உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்:

இன்று சமுதாயத்தில் முக்கிய நபர்களின் சந்திப்பை பெறுவீர்கள். கடன் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனதில் புரிதல் உண்டாகும் நாள்.

கும்பம்:

கலை சார்ந்த துறையில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். சொத்து பிரிக்கும் விஷயங்களில் கவனம் வேண்டும். எதையும் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும்.

மீனம்:

நினைத்த வேலை சரியாக செய்வீர்கள். நெருக்கமான உறவுகள் வழியே உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் வழியே உங்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US