இன்றைய ராசி பலன்(28.12.2024)

Report

மேஷம்:

இன்றைய நாள் பழைய உறவுகள் உங்களை தேடி வரும்.வருமானம் அதிகரிக்கும்.தேவை இல்லாத விவாதங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.நன்மையான நாள்.

ரிஷபம்:

காலை முதல் மனம் சிறு பதட்டத்துடன் காணப்படும்.வம்பு வழக்குகளில் சிக்காமல் இருப்பது நன்மையை தரும்.வியாபாரத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.யோகமான நாள்.

மிதுனம்:

பிறரிடம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.வங்கிக்கணக்கில் சேமிப்பு அதிகம் ஆகும்.ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்:

மனக்குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவால் வேலை நடந்தேறும். உழைப்போர் நிலை உயரும்.திட்டமிட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்:

நண்பர்கள் உங்களுக்கு எதிரியாக மாற வாய்ப்புகள் உள்ளது.கவனமாக இருக்கவும்.தேவை இல்லாத செலவுகளை தவிர்ப்பது பண சிக்கலில் இருந்து காப்பாற்றும்.எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி:

வியாபாரத்தில் இருந்த தடை விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். வருமானம் அதிகரிக்கும்.நினைத்த வேலைகள் நினைத்தபடி நடக்கும்.யோகமான நாள்.

ஜோதிடம்:இறந்தவர்களின் ஆடையை குடும்பத்தினர் அணியலாமா?

ஜோதிடம்:இறந்தவர்களின் ஆடையை குடும்பத்தினர் அணியலாமா?

துலாம்:

உடல் உபாதைகள் உண்டாகலாம்.மனதில் நம்பிக்கை பிறக்கும்.கடவுள் வழிபாடு உங்களுக்கு வெற்றியை தரும்.அலுவலகத்தில் உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.அமைதியான நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தினர் ஆலோசனை நன்மையில் முடியும்.மனக்குழப்பம் விலகி தெளிவுண்டாகும். உங்கள் தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

தனுசு:

குடும்பத்தில் சிறு சிறு சஞ்சலம் உருவாகும்.உங்களை புரிந்து கொள்ளாமல் சூழ்நிலைகள் மாறலாம்.அமைதி காப்பது நல்லது.உங்களுக்கான தேவையை சரி செய்வீர்கள்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்:

நண்பர்கள் உதவி நன்மை தரும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.செல்வாக்கு உயரும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர்.

கும்பம்:

நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் பணி லாபத்தில் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.மனக்குழப்பம் நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.

மீனம்:

நீங்கள் எதிர்பாராத நபர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.மனதில் உற்சாகம் பிறக்கும்.கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறந்த பலனை அளிக்கும்.வெற்றிகரமான நாள்.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US