இன்றைய ராசி பலன்(14-05-2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும்.

ரிஷபம்:

கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். எதையும் தீர ஆலோசித்து செயல்பட்டால் நினைத்ததை சாதிக்கலாம். மனதில் அமைதி உண்டாகும் நாள்.

மிதுனம்:

ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக சில மன கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தாயின் உடல் நிலையில் அக்கறை செலுத்துவது நன்மை அளிக்கும்.

கடகம்:

குடும்பத்தினர் செயல்பாட்டால் மனக்குழப்பம் கூடும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்:

இன்று பலரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. அவசரமான சூழலில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். இன்று உங்கள் உழைப்பால் உயர்வு அடைவீர்கள்.

வைகாசி 2025: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விரத நாட்கள்

வைகாசி 2025: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விரத நாட்கள்

கன்னி:

வாங்கிய கடனை அடைப்பீர்கள். தொழிலில் சந்தித்த நஷ்டத்தை சரி செய்வீர்கள். உங்கள் சூழ்நிலை அறிந்து குடும்பத்தினர் நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

துலாம்:

உடல் உபாதைகளால் மருத்துவரை சந்திக்க நேரிடலாம். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தில் உருவான சண்டைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.

விருச்சிகம்: 

இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது அவசியம். தேவையற்ற பிரச்னை தேடி வரும். பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதற்கு முன் யோசிக்கவும். சிலர் உங்களுக்கு மறைமுகமாக தொல்லையளிப்பர்.

தனுசு:

வியாபாரத்தில் எந்த ஒரு புதிய முதலீடுகளையும் செய்ய வேண்டாம். ஒரு சிலருக்கு பிள்ளைகள் வழியே சில சங்கடங்கள் உருவாகும். வேலை தொடர்பாக சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.

மகரம்:   

நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கவனமாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். 

கும்பம்:

குருப் பார்வையால் நெருக்கடிகள் நீங்கும். சதயம்: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும்.

மீனம்:

உடல் நிலையில் சந்தித்த சங்கடங்கள் விலகும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள். காரணமே இல்லாமல் பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வரும். கடனை அடைக்கும் காலம் ஆகும்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US