இன்றைய ராசி பலன்(29-05-2025)

Report

மேஷம்:

இன்று வேளையில் அதிக அலைச்சல் எற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மதியம் மேல் மனம் மகிழ்ச்சி அடையும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

ரிஷபம்:

நேற்று வரை மனதில் இருந்த பாரம் குறையும். சிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மூன்றாம் நபரிடம் தங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மிதுனம்:

இத்தனை நாள் சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவிற்கு வரும். சிலருக்கு வேலையில் சில சிக்கல் உண்டாகும். பெற்றோர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். அமைதி காப்பது நன்மை தரும்.

கடகம்:

தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான செயல் நடக்கும். திடீர் செலவு தோன்றும். மனக்குழப்பம் விலகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

இன்று உங்கள் மனதில் உள்ள எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகும். தொழில் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவை பெரும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

கன்னி:

பெரியோர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் முயற்சி லாபமாகும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும்.

துலாம்:

இன்று உங்கள் உறவினர் இடையே ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மனம் தெளிவு பெரும். இறைவழிபாட்டில் நாட்டம் அதிகம் ஆகும். துணிச்சலும் தைரியமும் பிறக்கும். நன்மையான நாள்.

ஜோதிடம்: அஷ்டமத்து சனியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது

ஜோதிடம்: அஷ்டமத்து சனியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது

விருச்சிகம்:

வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது. மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடி வரும்.

தனுசு:

தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நன்மை தரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் உண்டான பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.

மகரம்:

நினைத்ததை சாதிப்பீர் கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உங்கள் முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

விழிப்புடன் செயல்படுவது அவசியம். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடன் இருப்பவர்கள் செய்வர்.

மீனம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் விலகி செல்வார்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்து கிடைக்கும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US