இன்றைய ராசி பலன்(17.07.2024)
மேஷம்
எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடியை சந்திக்க நேரிடும்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் நாள். எதிர்பார்த்த பணமும் தகவலும் வரும்.
ரிஷபம்
உங்கள் செயலில் தடையும் தாமதமும் ஏற்படலாம்.நினைப்பதும் ஒன்று நடப்பதும் ஒன்றாக இருக்கலாம்.எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள்.
மிதுனம்
உடல் நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும்.எதிர்பாராத எதிரிகள் தொல்லை உருவாகலாம். தொழில் போட்டியாளரால் தோன்றிய சங்கடத்திற்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கடகம்
பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். புதிய முயற்சியையும், வெளியூர் பயணத்தையும் தள்ளி வைப்பது நல்லது.
சிம்மம்
உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.திட்டமிட்டு செயல்படும் முயற்சி இழுபறியாகும்.உங்கள் செயல்களை பிறர் பாராட்டுவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கன்னி
உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். குடும்பத்தில் கவனம் செலுத்துவது நல்லது.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி லாபம் தரும்.
துலாம்
எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.எதையும் அமைதியுடன் செயல்படுவது நன்மை தரும். நேற்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.புதிய பொருள் சேரும்.
விருச்சிகம்
உங்கள் விருப்பம் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் செயலில் லாபம் காண்பீர். மனக்குழப்பம் தோன்றும். உங்கள் தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.
தனுசு
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாகலாம்.உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
மகரம்
நீங்கள் மேற்கொள்ளும் செயலில் எதிர்பாராத தடை உண்டாகலாம்.ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மையை தரும்.நண்பர்கள் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
கும்பம்
நம்பிக்கையுடன் எதையும் மேற்கொண்டால் நன்மை அடையலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
மீனம்
வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும்.நேற்றுவரை இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தினர் எதிர்பார்த்த பணம் வரும்.மகிழ்ச்சியான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |