இன்றைய ராசி பலன் (30.06.2024)
மேஷம்
விழிப்புடன் செயல் பட வேண்டிய நாள்.மனதில் தைரியம் பிறக்கும்.நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.செய்யும் எதையும் திட்டமிட்டு செயல் படவேண்டிய நாள்.
ரிஷபம்
திடீர் வெளியூர் பயணம் நன்மையை தரும்.உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.செய்யும் செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
மிதுனம்
தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் கைக்கு வரும்.கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.உறவினரால் சங்கடம் ஏற்படலாம்.
கடகம்
வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து வரும். தடைப்பட்டிருந்த செயல்கள் தொடங்க வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பார்த்த வருமானம் வரும். யோகமான நாள்.
சிம்மம்
நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.தேவை இல்லாத அலைச்சல் மன உளைச்சலை தரலாம். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
கன்னி
நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்கலாம் என்பதால் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
துலாம்
உடல் நிலையில் சில பிரச்சனைகள் வரலாம்.செய்யும் செயல்களில் குழப்பம் உண்டாகலாம்.இறை வழிபாடு நன்மையை தரும்.குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்கள். நீண்டநாள் பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
தனுசு
உங்கள் முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்படலாம்.சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர்கள். நீண்ட நாள் கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.
மகரம்
உங்கள் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.வியாபாரம் நினைத்த லாபம் கிடைக்காது.எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
கும்பம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
மீனம்
பொருளாதார நெருக்கடிகள் விலகும்.மனதில் உற்ச்சாகம் பிறக்கும்.நீண்ட நாள் பிரச்சனை முடிவிற்கு வரும். பணத் தேவை பூர்த்தியாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |