சிவன் கையில் ராகு கேது: எங்கும் பார்த்திடாத அரிய காட்சி
சில தெய்வங்களை கோயிலுக்கு சென்று வணங்கினால் பாவம் தீரும்.ஆனால் இவரை மனதில் நினைத்தாலே பாவங்கள் தீரும்.
முக்தி பிறக்கும்.அவர் தான் சிவ பெருமான்.அப்படியாக சிவன் என்றாலே அவர் வடிவம் லிங்கமாக பார்த்திருப்போம்,சில இடங்களில் உருவ கோலத்தில் சிவ பெருமான் அருள்பலிப்பார்.
அப்படியாக நவகிரங்களின் அருள் பெற சிவ பெருமான் கோயில் பல இடங்களில் இருக்கிறது.அங்கு மூலவராக சிவ பெருமானும் நவகிரகளுக்கு என்று தனி சந்நிதியும் இருக்கும்.
ஆனால் ஆனால், சிவனுடன் நவக்கிரகங்கள் இணைந்து காட்சி தருவது மிகவும் அரிதாகும். அப்படி சிவபெருமான் பாவ கிரகங்களான ராகு மற்றும் கேதுவை தனது இரு கரங்களிலும் தாங்கியபடி கட்சி தருவது எங்குமே காண கிடைக்காத திருக்கோலம்.
இப்படிப்பட்ட அபூர்வ திருக்கோலத்தில் சிவபெருமானையும் ராகு கேதுவையும் காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோயில் பின்புறம் ஜவஹர்லால் நேரு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளீஸ்வரர் திருக்கோயில் தரிசிக்கலாம்.
இக்கோயிலில் சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளிக்கின்றார். இதில் சிறப்பு என்னவென்றால், அவர் ராகு, கேதுவை தனது இரு கரங்களில் ஏந்தியிருக்கிறார். மற்றும் ஒரு சிறப்பாக ராகுவும் கேதுவும் மனித முகத்துடன் காட்சியளிக்கிறார்கள்.
இதுபோன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் சிவபெருமானையும் ராகு கேதுவையும் நாம் வேறு எந்த கோயிலிலும் காண முடியாது.
இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிகளில் மூலவர் ஸ்ரீ மகாகாளீஸ்வரரை சுற்றி அமைந்துள்ளது சிறப்பு.
ஸ்ரீ மாகாளீஸ்வரர் திருக்கரங்களில் ராகு, கேது ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்திற்காக இங்கு மாகாளீஸ்வரரைபிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது.
அதனால் இக்கோயில் ராகு கேது பரிகாரத் தலமாக திகழ்கிறது. இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை துதிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷங்கள் ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |