இன்றைய ராசி பலன்(10-07-2025)
மேஷம்:
நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் சில சங்கடம் உண்டாகும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்:
இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். வார்த்தைகளில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று முடிந்த அளவு வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் சநதிக்க நேரலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால் பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
கடகம்:
மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகிச்செல்வர். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். நீண்ட நாள் விவகாரம் இன்று முடிவிற்கு வரும்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் உங்கள் முழு உழைப்பையும் போட வேண்டிய நாள். சொந்தங்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். காதல் வாழ்க்கையில் சில கசப்புகள் உண்டாகும்.
கன்னி:
வெளியூர் பயணம் செல்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். உறவினர்கள் இடையே தேவை இல்லாத விமர்சனங்களுக்கு ஆளாகலாம். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்கள்.
துலாம்:
மனதில் தெளிவும் ஞானமும் பிறக்கும். பெற்றோர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். வேலையில் சற்று கவனம் அவசியம். உணவு பழக்கவழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
வெளியூர் பயணத்தில் சங்கடத்தை சந்திப்பீர். உங்களது பேச்சால் விரோதம் உண்டாகும். கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
தனுசு:
பிள்ளைகள் பற்றி புரிந்து கொள்வீர்கள். உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். இறைவழிபாடு மன அமைதியை கொடுக்கும்.
மகரம்:
பண விவகாரத்தில் கவனம் தேவை. செல்வாக்கை வெளிக்காட்ட செலவுகள் செய்வீர். அதனால் வீண் பண இழப்புகள் உண்டாகும். கடந்த காலத்தை யோசிக்காமல் முன்னேறி செல்லுங்கள்.
கும்பம்:
நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். திருமண வயதினருக்கு வரன் வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.
மீனம்:
உடல் நிலையில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு சொந்தங்கள் வழியாக சில சிக்கல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். முன்னோர்கள் வழிபாடு சிறந்த பலன் அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |