இன்றைய ராசி பலன்(12-07-2025)
மேஷம்:
முடிந்த வரை கடைகளில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். பொருளாதாரத்தில் சிக்கல்கள் உண்டாகும்.
ரிஷபம்:
வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நன்மை அளிக்கும். முன்னோர்கள் வழிபாடு உங்களுக்கு மன உறுதியும் தைரியமும் கொடுக்கும்.
மிதுனம்:
குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். நீண்ட நாள் பிரச்சனை ஒன்று நல்ல முடிவிற்கு வரும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
கடகம்:
தேவை இல்லாத கருத்துக்கள் சொல்வதால் சில சிக்கல்களில் மாட்டிக்கொள்வீர்கள். சகோதரன் வழி உறவால் நன்மை உண்டாகும். உடல் நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும்.
சிம்மம்:
வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட விரிசல் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவார்கள். திருமண வரன் மனதிற்கு பிடித்தது போல் அமையும்.
துலாம்:
மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். இறைவழிபாடு நன்மை தரும். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் நாள்.
விருச்சிகம்:
தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பிறரிடம் பொறுப்பை வழங்காமல் அனைத்தையும் தங்கள் மேற்பார்வையில் செய்வது நல்லது.
தனுசு:
இன்று மனதில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குலதெய்வ வழிபாடு நன்மையை செய்யும். ஒரு சிலர் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்:
எதிர்பார்த்த பணம் வரும். சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனதில் நம்பிக்கை இருக்கும். செயல் வெற்றியாகும். செயல்களில் எதிர்பாராத தடையுண்டாகும்.
கும்பம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வேண்டுதல் இன்று நிறைவேறும்.
மீனம்:
குலதெய்வ அருளால் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக மனதிற்கு சங்கடம் கொடுத்த விஷயம் விலகி செல்லும். பலரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |