ராமாயணத்தில் இருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 பாடங்கள்
உலகம் போற்றும் காவியங்களில் ராமாயணமும் ஒன்று. இந்த காவியத்தை படிக்க படிக்க நாம் பல்வேறு விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதிலும் குறிப்பாக நாம் ராமாயணத்தில் இருந்து வாழ்க்கைக்கு கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள் பற்றிப் பார்ப்போம்.
1. நாம் எப்பொழுதும் அதர்மத்திற்கு துணை போகக்கூடாது. அதேப்போல் யாராக இருந்தாலும் அவர்கள் தவறு செய்தால் அவர்களுடன் துணை செல்லாமல் எதிர்த்து போராட வேண்டும். இராமாயணத்தில் எவ்வாறு ராவணனை எதிர்த்து துணிந்து ஸ்ரீ ராமர் போரிட்டாரோ அதே போல் துணிந்து நிற்க்க வேண்டும்.
2. நாம் தனியாக நின்று போராடுவதை காட்டிலும் பக்கபலமாக நமக்கு துணையாக நம்பிக்கையான நபர்களுடன் சேர்ந்து போரிடும் பொழுது வெற்றி எளிதாக நம் வசம் ஆகிறது. ஸ்ரீ ராமர் கட்டாயமாக தனியாக ரவணனை வெல்லவில்லை. அவருடன் ஹனுமன், சுக்ரீவன் போன்றவர்கள் உறுதுணையாக இருந்து போரிட்டதால் தான் வெற்றி பெறமுடிந்தது.
3. மனிதனுக்கு அவன் கனவை நினைவாக்க அர்ப்பணிப்பு மிக முக்கியம். ஸ்ரீ ராமர் அவருடைய 14 வருட வானவசத்தை சத்தியமாக கடைப்பிடித்தார். இது அவருடைய நல்ல குணத்தையும், முழு அர்ப்பணிப்பையும் நமக்கு உணர்த்துகிறது.
4. ராமாயணத்தில் ஹனுமன் எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்த போதிலும் துவண்டு போகாமல் அவரின் புத்திகூர்மையாலும், உடல் பலத்தாலும் வென்றார். ஆக அறிவோடும், உடல் பலத்தோடும் இருப்பதை காட்டிலும் அதை எந்த நேரத்திற்கு சரியாக பயன் படுத்துகின்றோம் என்பதே சிறந்தது.
5. ராமாயணத்தில் ராமரும், அவரின் சகோதரர்களும் அவர்களுக்கு ஆற்றல்களும், வித்தைகளும் கற்றுக்கொடுத்த குருக்களுக்கு மிக பெரிய அளவில் முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்தார்கள். அதுவே அவர்களுக்கு மிக பெரிய ஆசீர்வாதமாக அமைந்தது.
6. ஸ்ரீ ராமர் எவ்வளவு பெரிய இன்னல்கள் சந்தித்த போதிலும், மனம் உடைந்து போகாமல் அதை பொறுமையோடும் நிதானத்தோடும் சரி செய்தார். அவரை போல் நாமும் வாழ்க்கை எத்தனை பெரிய துயரத்தை நமக்கு கொடுத்தாலும் பொறுமை இழக்காமல் போராடுவது அவசியம்.
7. ராமாயணம் என்னும் காவியம் பொறுமை என்னும் ஒற்றை வார்த்தையால் வெற்றியை தன் வசம் ஆக்கியது. ஆக, மனிதன் சாதிக்க அவனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக மிக அவசியம். அதுவே அவனை வெற்றிக்கு வழிவகுக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |