இன்றைய ராசி பலன்(03-06-2025)

Report

மேஷம்:

இன்று வேலை செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். பண வரவில் எற்பட்ட சிக்கல்கள் விலகி செல்லும்.

ரிஷபம்:

வேலை காரணமாக சிலருக்கு சில பதட்டம் உண்டாகும். உங்கள் விருப்பங்களை பெற்றோர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். உடல் உபாதைகளால் சில சிக்கல் உண்டாகலாம்.

மிதுனம்:

தடைகளை தாண்டி வெற்றி அடையும் நாள். நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்:

 இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணியிடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். உங்கள் பேச்சாற்றல் இன்று உங்களுக்கு கை கொடுக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம்:

இன்று உங்களை நெருங்கியவர்கள் காயப்படுத்தலாம். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினருக்கு உடலில் சில சிக்கல்கள் உருவாகலாம். மனதில் தெளிவு பிறக்கும்.

கன்னி:

இன்று தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நன்மை தரும். வரவிற்கு ஏற்ப செலவு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

கல்யாணம் செய்ய ஆர்வமாக இருக்கும் 3 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா?

கல்யாணம் செய்ய ஆர்வமாக இருக்கும் 3 ராசி பெண்கள்.., யார் யார் தெரியுமா?

 

துலாம்:

குடும்பத்தில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனையால் சில உடல் அசதிகள் தோன்றலாம். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.

விருச்சிகம்: 

பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

தனுசு:

வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பு உயரும். திட்டமிட்டபடி சரியாக உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். பிறர் கொடுக்கும் விமர்சனங்களை காதில் வாங்கி கொள்ளாமல் இருப்பது நன்மை தரும்.

மகரம்:

னம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்: 

வாழ்க்கைத் துணையின் ஆதரவால் மனதில் இருந்த குழப்பம் நீங்கும். செயலில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். 

மீனம்:

உங்கள் உடல்நிலையில் சந்தித்த பாதிப்புகள் விலகி செல்லும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் எல்லாம் விலகி செல்லும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US