இன்றைய ராசி பலன்(17-06-2025)

Report

மேஷம்:

இன்று வேலை பளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடலில் சில சங்கடங்கள் தோன்றும். தொழில் செய்யும் இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். கவனமாக செயல்படுவது அவசியம்.

ரிஷபம்:

இன்று திருமணம் சார்ந்த கவலைகள் உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களால் சில தொந்தரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்:

இன்று உங்களை அறியாமல் சில தவறுகள் செய்ய நேரலாம். வெளி நபர்களிடம் உங்களை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.

கடகம்:

இன்று உங்கள் முயற்சியில் சில தடைகளும் தடங்கலும் உண்டாகும். இயந்திரப்பணியில் எச்சரிக்கை அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் விலகும்.

சிம்மம்:

உங்களின் கருத்துக்களுக்கு சிலர் விமர்சனங்கள் தர வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தாய் உடல் நிலையில் கவனமாக இருங்கள்.

கன்னி:

இன்று திருமணம் வாழ்க்கை மிக மிக சிறப்பாக அமையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் நல்ல ஆதாயத்தை கொடுக்கும்.

துலாம்:

இன்று உங்கள் முயற்சிகளில் சில தடையும் தாமதம் உண்டாகலாம். குடும்பத்தினர் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

வீட்டில் நேரம் சரி இல்லையா? இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும்

வீட்டில் நேரம் சரி இல்லையா? இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும்

 

விருச்சிகம்:

வார்த்தைகளால் தாய்வழி உறவினருடன் சிறு சங்கடம் உண்டாகும். அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது. வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

தனுசு:

இன்று உங்கள் குடுபம்பத்தில் சில நற்செய்திகள் கிடைக்கும். இறைவழிபாடு சிறப்பான பலனைக்கொடுக்கும். தாய் வழி உறவுகளிடம் நல்ல பிணைப்பு உண்டாகும்.

மகரம்:

தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் வரும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும்.

கும்பம்: 

குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் எடுத்த வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அலுவலக நெருக்கடி நீங்கும்.

மீனம்:

உங்கள் மனம் தேவை இல்லாமல் குழப்பம் அடையும். புதிய முயற்சிகளை ஒத்திவைப்பது நன்மை தரும். தேவை இல்லாத அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US