சுவாமிக்கு சமர்ப்பித்த பூ கீழே விழுந்தால் சகுனம் சொல்வது என்ன?

By Sakthi Raj Jul 24, 2026 01:00 PM GMT
Report

 நாம் பூஜையின் பொழுது சுவாமிக்கு பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது உண்டு. ஒவ்வொரு முறையும் நாம் சுவாமியை வழிபாடு செய்கின்ற பொழுது ஏதேனும் வேண்டுதல் வைப்பது உண்டு.

அப்பொழுது இறைவன் நம் வேண்டுதலுக்கு உடனடியாக சில அறிகுறிகள் கொண்டு சில நேரங்களில் பதில் சொல்வதை காணலாம்.

அந்த வகையில் சுவாமிக்கு வைக்க கூடிய பூக்கள் கீழே விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

சுவாமிக்கு சமர்ப்பித்த பூ கீழே விழுந்தால் சகுனம் சொல்வது என்ன? | Is A Fallen Offering Flower Is A Divine Sign

நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள்

நீங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட பகவான் கிருஷ்ணர் சொல்லும் 5 வழிமுறைகள்

1. இப்பொழுது நாம் சாமி கும்பிடும் பொழுது சுவாமிக்கு வலது பக்கத்திலிருந்து பூ கீழே விழுந்தால் நாம் வேண்டிய காரியம் உடனடியாக நிறைவேறும் என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

2. அதுவே சுவாமிக்கு படைத்த பூ இடது புறத்தில் விழுந்தால் நாம் வேண்டிய காரியம் நிறைவேறும். ஆனால் கொஞ்சம் காலதாமதம் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

3. நாம் சுவாமிக்கு சமர்ப்பித்த பூ நேரடியாக கீழே விழுந்தால் நாம் எடுக்கக்கூடிய காரியங்களில் சிறிது கவனமும் அதிக முயற்சியும் தேவை என்று சொல்லப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US