ராகு எந்த நடச்சத்திரத்தில் இருக்கிறார்? உங்களுக்கு பணம் எந்த வழியில் சேரும் தெரியுமா?

By Sakthi Raj Sep 09, 2026 09:00 AM GMT
Report

  ஜோதிடத்தில் ராகு என்பவர் பேராசை, பொருள், மோகம் மற்றும் உலகத்தில் இருக்கக்கூடிய இன்பங்களை குறிக்கக்கூடிய நிழல் கிரகம் ஆகும். அதைவிட முக்கியமாக ராகு எந்த அதிபதி நட்சத்திர அதிபதியோ அதற்கு ஏற்ப ஒருவருடைய ஆசை தன்மையும் சம்பாதிக்கக்கூடிய முறையும் மாறுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. சுக்கிரன் நட்சத்திரங்கள் (பரணி, பூரம், பூராடம்):

இந்த இடங்களில் ராகு நின்றால் இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை மற்றும் தங்கம், வாகனம், அழகு பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். ஆடம்பர செலவுக்காக அதிகம் சேமிப்பு கரைப்பார்கள்.

2. புதன் நட்சத்திரங்கள் (ஆயில்யம், கேட்டை, ரேவதி):

இந்த இடங்களில் ராகு நின்றால் இவர்களுக்கு வியாபாரம், பங்கு சந்தை, கமிஷன், தொழில் புத்திசாலித்தனம் வழியாக பணம் சம்பாதிக்க கூடிய எண்ணத்தை தூண்டுவார்.

ராகு எந்த நடச்சத்திரத்தில் இருக்கிறார்? உங்களுக்கு பணம் எந்த வழியில் சேரும் தெரியுமா? | What Rahu Nakshatra Reveals Your Wealth Path

இந்த 4 ராசியினர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே முடியாதாம்

இந்த 4 ராசியினர் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே முடியாதாம்

3. செவ்வாய் நட்சத்திரங்கள் (மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்):

இந்த நட்சத்திரங்களில் ராகு பகவான் இருக்கும் பொழுது வீடு கட்டிடம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் வெற்றியும் போட்டிகளில் வென்று பணத்தையும் சேர்க்கக்கூடிய அமைப்பை தூண்டுவார்.

4. குரு நட்சத்திரங்கள் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி):

இந்த நட்சத்திரங்களில் ராகு நிற்கும் பொழுது அவர்களுக்கு செல்வம் பண சேமிப்பு உயர்ந்த பதிவுகள் வழியாக செல்வத்தை சேர்ப்பதற்கான ஆசையை தூண்டுவார்.

5. சனி நட்சத்திரங்கள் (பூசம், அனுஷம், உத்திரட்டாதி):

இந்த நட்சத்திரங்களில் ராகு இருக்கின்ற பொழுது இவர்களுக்கு இரும்பு, தொழிற்சாலை, உழைப்பு, நீண்ட நாள் முதலீடு வழியாக நிலையானதாகவும் உறுதியான செல்வத்தையும் சேர்க்கக்கூடிய எண்ணம் கொடுப்பார்.

6. சூரிய நட்சத்திரங்கள் (கிருத்திகை, உத்திரம், உத்திராடம்):

இந்த நட்சத்திரங்களில் ராகு பகவான் நிற்கின்ற பொழுது இவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள், அதிகாரம் மற்றும் புகழ் வழியாக செல்வம் சேர்க்கும் ஆசை உண்டாக்கும்.

ராகு எந்த நடச்சத்திரத்தில் இருக்கிறார்? உங்களுக்கு பணம் எந்த வழியில் சேரும் தெரியுமா? | What Rahu Nakshatra Reveals Your Wealth Path

ஒரு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் ஒரு ரூபாய் இருந்தால் அடைத்து விடலாம்.. எப்படி தெரியுமா?

ஒரு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் ஒரு ரூபாய் இருந்தால் அடைத்து விடலாம்.. எப்படி தெரியுமா?

7. சந்திர நட்சத்திரங்கள் (ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்):

இந்த இடங்களில் ராகு நிற்க அவர்களுக்கு வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் நீர் சார்ந்த தொழில் மூலம் பணவரவை அவர் கொடுப்பார்.

8. ராகு நட்சத்திரங்கள் (திருவாதிரை, சுவாதி, சதயம்):

ராகுவின் சொந்த வீடு என்பதால் இங்கு இருக்கும் பொழுது இவர்களுக்கு பேராசை மற்றும் எப்பேர்ப்பட்ட சாதனையையும் செய்து பெரிய அளவில் பணத்தை ஈர்க்கக்கூடிய விசித்திரமான எண்ணங்களை கொடுப்பார்.

9. கேது நட்சத்திரங்கள் (அசுவினி, மகம், மூலம்):

நட்சத்திரங்களில் ராகு இருக்க இவர்களுக்கு திடீர் பணவரவு பற்றின்மை போன்ற இரண்டு விதமான மனநிலையை அவர் கொடுக்கிறார்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US