ஒரு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் ஒரு ரூபாய் இருந்தால் அடைத்து விடலாம்.. எப்படி தெரியுமா?
நேரம் சரியில்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் நாம் கடனாளியாகக் கூடிய நிலை உண்டாகிவிடும்.
அந்த வகையில், எவ்வளவு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் அதை நாம் இறைவழிபாட்டாலும் நல்ல உழைப்பு இருந்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடலாம்.
அப்படியாக, செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றியும், நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்வதன் வழியாக நம்முடைய கடன் தீருவதோடு மனவலிமையும் புதிய பாதையும் நமக்கு பிறக்கும்.
அதே போல், மைத்திர முகூர்த்தம் என்பது ஒரு சிறந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் ஒரு சிறிய அளவிலாவது நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தை நாம் கடன் தொகையாக திரும்ப செலுத்துவது விரைவில் கடன் அடைவதற்கான பாக்கியத்தை உருவாக்கும்.

மேலும், சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றுவது அல்லது தேய்பிறை அஷ்டமி அன்று மிளகு தீபம் ஏற்றுவது நமக்கு தேவையற்ற பண விரயங்களை தடுக்கவும், கடன் பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.
அதோடு, சிவபெருமானுக்கு தேன் அல்லது அரிசி மாவு அபிஷேகம் செய்வதும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்குவதோடு மன உறுதி கொடுக்கும்.
மிக முக்கியமாக வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நிச்சயம் வீடுகளில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை குறைக்கும். முடிந்த வரை பசியால் வாடும் நபர்களுக்கு உணவளிப்பதும் கடன் சுமையை குறைக்கக்கூடிய ஒரு நல்ல வழியாக அமையும்.
வீட்டின் அருகில் இருக்கக்கூடிய உயிரினங்களுக்கு உதவுவது கர்ம வினையானது படிப்படியாக குறையும். மேலும், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு நாம் என்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |