வீட்டில் பாகற்காய் வளர்ப்பது நல்லதா? கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் மரங்களும் செடிகளும் குறிப்பிட்ட இடத்தில் தான் வளர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை முறையாக கடைப்பிடிப்பது மூலம் ஒருவருக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்குவதுடன் கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
பலர் தங்கள் வீடுகளில் பல வகையான மரங்கள் மற்றும் செடிகளை நடுகிறார்கள், அவை சுப மற்றும் அசுபமாக கருதப்படுகின்றன.
அறியாமல் தவறான மரங்கள் நடப்பட்டால், அது மனிதனுக்கு தீங்கான பலனைத் தரும். இப்போது பலரது கேள்வியாகவும் இருப்பது வீட்டில் பாகற்காய் வளர்க்கலாமா என்பது தான். அது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பாகற்காய் வளர்ப்பது நல்லதா?
பாகற்காய் ஒரு கசப்பான காய்கறியாகவும் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றலும் எதிர்மறையானதாக கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பாகற்காய் செடியை நடக் கூடாது என்று கூறப்படுகிறது. இந்த செடியை நடுவதால் வாஸ்து குறைபாடுகள் ஏற்படுவதோடு அசுப பலன்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
பாகற்காய் செடியை வீட்டிற்கு வெளியே நடலாம், ஆனால் இந்த செடியை வீட்டின் தெற்கு திசையை நோக்கி நடக்கூடாது.
அதை மீறி வளர்த்தால் குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை, வீட்டில் எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.
வீட்டில் ஒரு கசப்பு செடியை வளர்ப்பது நிதி நிலைமையை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. மேலும் நபர் ஒருவர் கடன் தொடர்பான பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்
எனவே, பாகற்காய் செடியை வீட்டில் ஒருபோதும் நடக்கூடாது என்பதை கருத்தில் கொள்வது நல்லதாகும்.