ஒரு முறை ஏற்றினால் பல முறை ஏற்றிய பலன் கொடுக்கும் ஐஸ்வர்ய தீபம்
ஒரு மனிதனுக்கு நல்ல செல்வ வளம் இருக்க வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மஹாலக்ஷ்மியின் அருள் தேவை.அப்படியாக மஹாலக்ஷ்மியின் அருளை பெற வேண்டும் என்றால் நம்முடைய வீடு மங்களகரமாக இருக்க வேண்டும்.
நாம் வீடு வீடு மங்களகரமாக இருக்க நம்முடைய எண்ணம் பூஜை அறை வழிபாட்டு முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.அப்படியாக மஹாலக்ஷ்மியின் அருளை பெறவும் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகவும் நாம் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
சாதாரணமாக நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்றினாலே பல மடங்கு பலன் தரும்.விளக்கில் இருந்து வரும் ஒளியானது நம்முடைய வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டி நேர்மறை சக்திகளை வழங்கும்.மேலும் நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபத்திற்கு பின்னாலும் பல்வேறு பலன்கள் இருக்கிறது.
அதாவது தீபம் ஏற்றும் விளக்கில் தொடங்கி எண்ணெய் அதில் போடும் திரி வரை நமக்கு பல விதமான நன்மைகள் வழங்குகிறது.அப்படியாக நாம் ஏற்றும் ஐஸ்வர்ய தீபம் ஆனது வெள்ளிக்கிழமையில் ஏற்ற சகல நன்மைகளும் அளிக்கிறது.
அப்படி வெள்ளிக்கிழமை ஏற்றுபவர்களாக இருந்தால் தொடர்ச்சியாக ஒன்பது வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டும். இல்லை தினமும் ஏற்றி விடலாம் என்று நினைப்பவர்கள் தொடர்ச்சியாக 21 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை ஆறு மணிக்கு மேல ஏற்றி வழிபாடு செய்யலாம்.இந்த தீபத்திற்கு அகல் விளக்கே பல நன்மைகள் தரும்.மேலும் இதில் ஊற்றக்கூடிய எண்ணெய் என்பது நல்லெண்ணையாக இருக்க வேண்டும்.
பிறகு இந்த ஐஸ்வர்ய தீபத்தில் போட கூடிய திரி தான் மிக முக்கியமான திரி.அந்த திரியின் பெயர் தான் மார்வாடி திரி. இந்த திரி எல்லா பூஜை பொருட்கள் கடைகளிலும் கிடைக்கும்.இந்த நூலை வாங்கி வந்து திரிபோல நறுக்கி அகல் விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு செய்து நாம் தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை மேற்கொண்டு வாழ்க்கையில் ஐஸ்வர்யம் பெருகி சந்தோஷமாக வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |