இடது பாதம் அரிக்குதா? நீங்கள் எதிர்பாராத ஒன்று காத்திருக்கிறது
உள்ளங்கையில் ஏற்படும் அரிப்பு, கால் பாதத்தில் உண்டாகும் கூச்சம், கை - கால் என உங்கள் உடல் பாகங்களில் உண்டாகும் தழும்புகள் மற்றும் அடையாளங்கள் என
பாத அரிப்பு
அனைத்தும், உங்கள் வாழ்க்கையின் போக்கை குறிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஜோதிடத்தின்படி, இடது கால் பாதம் அறித்தால், விரைவில் நீங்கள் இறை பணியை செய்ய முன்வரலாம். சன்னியாசத்தை நாடிச் செல்லலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறைந்தது, சேவை தொடர்பான பணிகளில் நீங்கள் ஆர்வம் காட்டலாம், சமூக சேவை சார்ந்த பணிகளில் ஈடுபாடு காட்டலாம். மேலும் உங்கள் முன்னாள் காதல் உறவை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவருடன் மீண்டும் இணைந்து உங்கள் காதல் உறவை புதுப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
அதுமட்டும் இன்றி, பல ஆண்டுகளாக காணாமல் இருந்த உங்கள் நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு இடது கால் பாத அரிப்பு உண்டாவது, பண விஷயத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்.
அதாவது, எதிர்பாராத வழிகளில் இருந்து நிதி ஆதாயம் கிடைக்கும்; பூர்வீக சொத்துக்கள் வழியே எதிர்பார்த்த வெகுமதிகளும் கிடைக்கும். இடது கால் பாதத்தில் அரிப்பை சந்திக்கும் ஆண்கள், தங்கள் செயல் திட்டங்களில் வெற்றி காண்பார்கள்.
பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட்டு, தங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் பல குவிப்பார்கள். பொருளாதார நிலையை மேம்படுத்துவார்கள், தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்கள்.